Pradosham Nandi Sloka in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்று நம் பதிவின் வாயிலாக பிரதோஷம் அன்று சொல்ல வேண்டிய நந்தி சுலோகம் பற்றிய தகவல்களை தான் தெரிந்து கொள்ள போகின்றோம். பொதுவாக இந்து சமயத்தில் இருப்பவர்கள் ஒவ்வொரு விஷேச நாட்களில் கோவில்களுக்கு சென்று விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். அப்படி வரும் நாட்களில் பிரதோஷமும் ஓன்று. பொதுவாக நம்மில் பலரும் பிரதோஷத்தன்று நந்தி பகவானை வழிபடுவது வழக்கம். ஆகவே இந்த பதிவின் வாயிலாக பிரதோஷம் அன்று சொல்ல வேண்டிய நந்தி ஸ்லோகம் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பிரதோஷம் அன்று சொல்லவேண்டிய நந்தி ஸ்லோகம்:
பொதுவாக சிவ பெருமானையும் நந்தி தேவரையும் பிரதோஷ தினத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பானது. அதிலும் அத்தினத்தில் பூஜைகளில் அவசியம் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தால் கண்டிப்பாக நற்பலன்கள் கிடைக்கும். சிவ பெருமானின் திருவருள் கண்டிப்பாக நமக்கு கிடைக்கும். அதுபோல இந்த ஸ்லோகத்தை பிரதோஷ தினத்தில் சொல்வதால் சிவா பெருமானின் அருளும், நந்தி தேவரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். சரி வாங்க பிரதோஷம் அன்று சொல்லவேண்டிய நந்தி ஸ்லோகத்தை கீழ் காண்போம்.
சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி
சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி
கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி
கைலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி..!
பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி
பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி
நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி
நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி..!
செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி
சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி
மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி
மனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி..!
அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி
அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி
வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி
வணங்குகிறோம் எமைக்காக்க வருக..!
நந்தி பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி
பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி
வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி
வறுமையினைஎந்நாளும் அகற்றும் நந்தி..!
கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி
கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி
வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி
விதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி..!
வேந்தன் நகர் செய்யினிலே குளிக்கும் நந்தி
வியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி
சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி
செவி சாய்த்து அருள் கொடுக்கும் செல்வ நந்தி..!
கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி
குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி
பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி
புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி..!
தென்னாடுடைய சிவனே போற்றி..!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..! போற்றி..!
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |














