பிரதோஷ விரதம் 2019 – சனி பிரதோஷ மகிமை பற்றி தெரியுமா உங்களுக்கு..!
பிரதோஷ விரதம் 2019 – சிவபெருமானை நாம் தினமும் வணங்குகிறோம், இருப்பினும் சிவபெருமானை பிரதோஷ காலங்களில் விரதம் எடுத்து, எம்பெருமானின் ஆலயத்திற்கு சென்று வணங்கி வந்தால், சிறந்த பயன்களை பெறலாம்.
சரி நாம் பிரதோஷ விரதம் எடுப்பதால் கிடைக்கும் பயன்களை (pradosham viratham benefits in tamil) பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.
வீட்டில் உள்ள தீய சக்தியை விரட்ட எளிய கல் உப்பு பரிகாரம்..! |
பிரதோஷ விரதம் 2019 – சனி பிரதோஷ மகிமை பற்றி தெரியுமா உங்களுக்கு..!
மாதந்தோறும் இருமுறை வரும், அதாவது வளர் பிறை, தேய் பிறை திரயோதசி (13-ம் நாள்) நாட்கள் பிரதோஷ தினங்கள் ஆகும். இந்த நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும்.
இந்த தினங்களில் பரமசிவனை வழிபட்டு வந்தால் மற்ற நாட்களில் ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தும் நீங்கி, இன்பத்துடன் வாழலாம் என்பது நம்பிக்கையாகும்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பின், பௌர்ணமிக்கு பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களும் குறித்த நேரத்தில் அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
சிறப்பு பூஜைகள்:-
பிரதோஷ விரதம் 2019: – ஒவ்வொரு பிரதோஷ நாட்களிலும் சிவனுக்கு தேன், பால், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து பின் தீபாராதனை நடைபெறும்.
இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு தயிர், பால், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்க்காக வாங்கி தரலாம்.
பின் நந்தி தேவருக்கு அருகம்புல், பூ ஆகியவற்றை சாற்றிய பின்பு வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம்.
நந்தி தேவர் தீபாராதனைக்கு பின், மூலவரான லிங்கத்திற்கு பிறகு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க அனைத்து தோஷங்கள் மற்றும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
சனி பிரதோஷ விரதம் எடுப்பது எப்படி?
பிரதோஷ விரதம் 2019 – பிரதோஷ விரதம் மேற்கொள்ள நினைப்பவர்கள், வளர்பிறை தேய்பிறை என இரு பிரதோஷ தினங்களிலும் விரதம் மேற்கொள்ளலாம். அப்படி விரதம் இருக்க நினைப்போர் காலையில் எழுந்து குளித்துவிட்டு அந்த நாள் முழுக்க சிவ நாமத்தையோ அல்லது “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தையோ ஜபிக்கலாம்.
நேரம் இருந்தால் சிவபுராணம் படிக்கலாம். மாலை வேலையில் சிவன் கோயிலிற்கு சென்று நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறந்தது. நந்தி தேவரிடமும் சிவபெருமானிடமும் நமது குறைகள் அனைத்தையும் தீர்வைக்கும்படி மனதார வேண்டிக்கொண்டு கோவிலை வலம் வந்து விரதத்தினை முடிக்கலாம்.
பிரதோஷ விரதத்தினை முடிக்கும் சமயத்தில் நம்மால் முடிந்தவரை பசியால் வாடும் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்குவது நமக்கு சிறப்பை சேர்க்கும்.
அன்னதானம் வழங்க இயலாதோர் தங்களால் முடித்த உதவியை ஏழைகளுக்கு செய்யலாம்.
பூஜை அறை & பீரோவை வாஸ்து படி எங்கு வைத்தால் நல்லது..? |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |