பிரதமை திதியில் என்ன செய்யக்கூடாது.?

Advertisement

பிரதமையில் என்ன செய்யக்கூடாது.?

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பிரதமையில் என்ன செய்யக்கூடாது.? பிரதமை திதி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்டு 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் முதலாவது திதி பிரதமை ஆகும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் முதல் நாளாக வருவதால் இந்த நாள் பிரதமை என்று அழைக்கப்படுகிறது.

ஜோதிடத்தின்படி பிரதமை திதியில் சில விஷயங்களை செய்ய கூடாது என்று கூறப்படுகிறது. ஆகையால், அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதிவு அமையும். அதாவது. இப்பதிவின் வாயிலாக பிரதமை அன்று செய்ய கூடாதவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பிரதமை திதி பலன்கள்

பிரதமை அன்று செய்ய கூடாதவை:

பிரதமை அன்று செய்ய கூடாதவை

திதிகளில் முதல் திதி என்றால் பெருமையை பிரதமை திதி பெரும். இதனை பெரும்பாலானவர்களுக்கு பாட்டி முகம் என்று சொன்னால் தான் தெரியும். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு மறுநாள் வரக்கூடியதும் அமாவாசைக்கு மறுநாள் வரக்கூடியதும் தான் இந்த பிரதமை திதி. இந்த பிரதமை திதியை கிராமங்களில் பாட்டிமுகம், பாட்டியம் என்றெல்லாம் கூறுவார்கள். பெரும்பாலும் நம் வீட்டில் உள்ளவர்கள், இன்று பாட்டிமுகமாக இருக்கிறது. அதனால், இந்த சுப நிகழ்ச்சியை செய்ய வேண்டாம் என்று சொல்லி கூறியிருப்போம்.

ஏன் அப்படி சொல்கிறார்கள் என்றால், அன்றைய நாளில் சந்திரனின் ஒளி குன்றி காணப்படும். அதாவது ஒளியானது குறைவாக இருக்கும். இப்படி இருப்பின் நாம் இந்நாளில் தொடங்கும் காரியமும் குறைந்துகொண்டே இருக்குமே தவிர அதிகமானது. அதனால்,  பிரதமை திதியில் எந்தவொரு சுப காரியங்களையும் செய்ய கூடாது. மேலும், பிரதமையில் புதிய செயல்கள் எதுவும் செய்ய கூடாது மற்றும் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள கூடாது.  

பிரதமை திதிக்கான சூன்ய ராசிகள்:

பிரதமை திதிக்கான சூன்ய ராசிகள் துலாம் மற்றும் மகரம் ஆகும்.

எந்த திதியில் என்ன செய்யலாம்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement