Problems Due to Age Difference in Marriage in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்றைய பதிவில் நாம் அறிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் கணவன் மனைவி இடையே வயது வித்தியாசம் அதிகம் இருப்பது சரியா? தவறா? என்பதை பற்றி தான் பார்க்க உள்ளோம். இது போன்ற விஷயங்களை அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆக இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
அதிக வயது வித்தியாசம் என்று சொல்லப்படும் வயது எது:
பொதுவாக கணவன் மனைவி இடையே அதிக வயது வித்தியசம் என்று சொல்லப்படுவது குறைந்து 10 ஆண்டுகள் மேல் இருப்பதை அதிக வயது வித்தியாச திருமணம் என அழைக்கப்படுகிறது. இவ்வாறு அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துகொள்வதால் ஏற்படும் சிக்கல்கள் பற்றி நாம் இப்பொழுது படித்தறியலாம் வாங்க.
சமூகம் ஏற்காது:
அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர்கள், உறவினர் வீட்டு விஷேசங்களுக்கு சென்று உங்களை மற்றவர்களிடம் அறிமுகம் செய்துகொள்ளும் போது, எதிரில் நிற்கும் நபர் குறைந்தது 2 நிமிடம் அமைதி காப்பது உண்டு. காரணம் இந்த தம்பதியர்களை கணவன் மனைவியாக அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள மனம் வருவதில்லை.
குட்டவளியாகும் வயது:
அதிக வயது வித்தியாசத்தில் ஒருவர் திருமணம் செய்துகொள்ளும் போது, அந்த தம்பதிகளின் வாழ்க்கையில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கும், இவர்களின் வயது மீது பழி சுமத்தப்படும் அதாவது, தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படலாம், அப்படி தாமதம் ஆகும் போது இந்த வயது வித்தியாசத்தின் மீது தான் சமூகம் பழி போடும்.
கருத்து வேறுபாடுகள் வளரும்:
சமூகத்தை தவிர்த்து சொத்தை வீட்டிலேயே கணவன் மனைவி இடையே நிறைய மன கசப்புகள் எழலாம். வெவ்வேறு தசாப்தங்களை சேர்ந்த இவர்கள் இருவரின் விருப்ப வெறுப்புகளில் உள்ள மாற்றம், இவர்களுக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டிற்கு வெளிவாக்குகிறது.
குழந்தை பெறுவதில் குழப்பம்:
அதிகவயது வித்தியாச தம்பதியில் மனைவி அதிக வயது கொண்டவராக இருந்தால் அவரால் ஒரு குழந்தையை சுமந்து பெற்றெடுக்க முடியுமா? முடியாதா? என்ற கொல்வி முதலில் எழும். இந்த குழப்பம் சில சமயம், குழந்தையே வேண்டாம் என்ற முடிவுக்கு தூண்டும்.
விருப்பமற்ற கடமைகள்:
முதல் மனைவி இருந்து பின், இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் தங்களை விட மிகவும் குறைவான வயது கொண்ட பெண்ணை திருமணம் செய்துகொண்டால் முதல் மனைவி வழி குழந்தை இருப்பின், இந்த குழந்தையை பராமரிக்க வேண்டியது 2-வது மனைவியின் விருப்பமற்ற கடமையாக மாறிவிடுகிறது.
உடலுறவில் சிக்கல்:
வித்தியாசம் வயதில் மட்டும் இல்லாமல் இரசனையிலும் தான் எனவே உடலுறவின் போது ஒருவரின் விருப்பத்திற்கு மற்றொருவர் விட்டு கொடுப்பதில் பல சிக்கல்கள் எழலாம். அதே போல் இருவரது உடல் வாகும் இங்கு குறிப்பிடத்தக்க சில பிரச்சனைகளுக்கு காரணமாகலாம்.
முன்னுரிமை பிரச்சனைகள்:
அதிக வயது வித்தியாச தம்பதியில் பெரியவராக இருக்கும் நபர், பணி, பணம், குடும்ப நலன் என பெருபாலும் பெருக்க இருக்க முயற்சி செய்வார்கள். அதேபோல் வயதில் சிறியவர்கள் தங்கள் துணையின் பொறுப்பை புரிந்துகொள்ள இயலாமல் தவிப்பர்.
விரைவில் தனிமை:
அதிக வயது வித்தியாசம் கொண்ட தம்பதியில் பெரியவராக இருக்கும் நபர், தன் துணையை தனிமையில் விட்டு விரைவில் இறக்க நேரிடலாம், அதாவது இருவரும் இணைந்து வாழ்வதற்கான காலம் மிகவும் குறைவாகவே இருக்கும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |