புரட்டாசி 1 வழிபாடு செய்யும் முறை.!

Advertisement

Puratasi 1 Valipadu in Tamil | புரட்டாசி 1 வழிபாடு

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் புரட்டாசி 1 வழிபாடு செய்வது எப்படி.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.  புரட்டாசி மாதம் என்றாலே புண்ணிய மாதம் என்று கூறுவார்கள். தமிழ் மாதங்களில் ஆறாவது மாதமாக வருவது புரட்டாசி மாதம் ஆகும். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி, அமாவாசை, மகாளய பட்சம் என பல சுப நாட்கள் வரும்.

புரட்டாசி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது பெருமாள் வழிபாடு தான். இம்மாதம் முழுவதும் அசைவ உணவுகளை உட்கொள்ளாமல் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்வார்கள். புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபாடு செய்தால் பல்வேறு நன்மைகள் பெறலாம். எனவே, நாளை புரட்டாசி 1 பிறக்கிறது. பௌர்ணமி திதியும் சேர்ந்து வருகிறது. எனவே, அன்றைய தினத்தில் வீட்டில் வழிபாடு செய்வது மிகவும் அவசியம். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில், இப்பதிவில் புரட்டாசி 1 வழிபாடு செய்வது எப்படி என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம்.

Puratasi 1 Valipadu Murai in Tamil:

Puratasi 1 Valipadu Murai in Tamil

புரட்டாசி முதல் நாள் காலையில் எழுத்து நீராடி, பெருமாளுக்கு துளசி இலைகளால் கட்டப்பட்ட மாலை அணிவித்து வழிபட வேண்டும். பெருமாளுக்கு உகந்த பொருட்களில் முதலிடத்தில் வகிப்பது துளசி. ஆகையால், துளசி மாலை வாங்கி வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.

அடுத்ததாக, பஞ்ச பாத்திரத்தில் துளசி இலைகள், பச்சை கர்ப்பூரம் ஒரு துண்டு போட்டு பெருமையிடம் வைக்க வேண்டும். இந்த தீர்த்தத்தை வாசத்திற்கு பெருமாள் வாசம் செய்ய தொடங்கி விடுவார்.

பின்பு, பூஜை அறையில் நெய் விளக்கு ஏற்ற வேண்டும். பால் மற்றும் பழம் வைக்க வேண்டும்.  பூஜை செய்யும்போது பெருமாளுக்கு உகந்த மந்திரங்களை சொல்ல வேண்டும்.

கோவிந்தா, நாராயணா, பெருமாளே என்ற பெருமாள் நாமத்தை கூற வேண்டும். ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தை நாள் முழுவதும் நேரம் கிடைக்கும் நேரமெல்லாம் உச்சரியுங்கள். இவ்வாறாக, பெருமாளுக்கு விளக்கேற்றி துளசி மாலை அணிவித்து, பச்சை கற்பூரம் மற்றும் துளசி இலைகளை பஞ்ச பாத்திரத்தில் வைத்து வழிபட்டால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

வீட்டில் பெருமாளுக்கு பூஜை செய்து விட்டு, அருகில் உள்ள பெருமாள் கோவில்களுக்கு சென்று துளசி மாலை வாங்கி கொடுங்கள். அதேபோல், அம்பாளுக்கு தாமரைப் பூ வாங்கி கொடுங்கள். நாளை, பெளர்ணமி திதி வருவதால் மகாலட்சுமியை வழிபாடு செய்தால் வீட்டில் செல்வ செழிப்பு நீங்கும். ஆகையால், அம்பாளுக்கு தாமரை பூ வாங்கி கொடுத்து வழிபடுங்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement