Puratasi Month Special Days in Tamil | புரட்டாசி மாத முக்கிய நாட்கள்.!
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய முக்கிய விரத மற்றும் விசேஷ நாட்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஆன்மீக மாதங்கள் என கூறப்படும் மாதங்களில் புரட்டாசி மதமும் ஒன்று. இம்மாதம் முழுவதும் இறை அருவாளை நம் முன்னோர்களின் ஆசியையும் பெறுவதற்கு உரிய காலம் ஆகும். இம்மாதத்தில் நம் முன்னோர்களை வழிபட மகாளய அமாவாசையும், அம்பாளை வெளிப்படுவதற்கு உரிய நவராத்திரியும் வருகிறது. இதனை தவிர்த்து பல்வேறு சிறப்பு நாட்களும் உள்ளது. அதனை பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம்.
புரட்டாசி மாதத்தில், மகாளய பட்சம், மகாளய அமாவாசை, நவராத்திரி, ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மிக்க நாட்கள் வருகிறது. எனவே, இந்த விசேஷ நாட்கள் அனைத்தும் எந்த தேதியில் வருகிறது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
புரட்டாசி மாத விசேஷ நாட்கள் 2024:
தேதி | கிழமை | விசேஷ நாட்கள் |
புரட்டாசி 02 | புதன்கிழமை | மகாளய பட்சம் தொடக்கம் |
புரட்டாசி 05 | சனிக்கிழமை | மஹாபரணி |
புரட்டாசி 16 | புதன்கிழமை | மகாளய அமாவாசை, காந்தி ஜெயந்தி |
புரட்டாசி 17 | வியாழன்கிழமை | நவராத்திரி தொடக்கம் |
புரட்டாசி 25 | வெள்ளிக்கிழமை | சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை |
புரட்டாசி 26 | சனிக்கிழமை | விஜயதசமி |
புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும்.?
புரட்டாசி மாத விரத நாட்கள் 2024:
விரத நாட்கள் | தேதி | கிழமை |
அமாவாசை | புரட்டாசி 16 | புதன்கிழமை |
பெளர்ணமி | புரட்டாசி 01 மற்றும் புரட்டாசி 31 | செவ்வாய் மற்றும் வியாழன் |
கிருத்திகை | புரட்டாசி 06 | ஞாயிற்றுக்கிழமை |
திருவோணம் | புரட்டாசி 26 | சனிக்கிழமை |
ஏகாதசி | புரட்டாசி 12 மற்றும் புரட்டாசி 27 | சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை |
சஷ்டி | புரட்டாசி 07 மற்றும் புரட்டாசி 22 | திங்கள் மற்றும் செவ்வாய் |
சங்கடஹர சதுர்த்தி | புரட்டாசி 05 | சனிக்கிழமை |
சிவராத்திரி | புரட்டாசி 14 | திங்கட்கிழமை |
பிரதோஷம் | புரட்டாசி 14 மற்றும் புரட்டாசி 29 | திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை |
சதுர்த்தி | புரட்டாசி 20 | ஞாயிற்றுக்கிழமை |
புரட்டாசி மாதத்தில் வாஸ்து நாட்கள் எதுவும் கிடையாது.
புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து வழிபட முடியாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளை வழிபட வேண்டும். இம்மாதத்தில் வைணவர்கள் உள்ளிட்ட பலரும் பெருமாளை நினைத்து விரதம் இருந்து வழிப்படுவது வழக்கமாக உள்ளது.
புரட்டாசி மாதத்தில் எந்தெந்த காரியங்கள் செய்யலாம், செய்ய கூடாது என்று தெரியுமா.?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |