Purattasi Amavasai 2024 Date in Tamil | புரட்டாசி அமாவாசை எப்போது.?
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் புரட்டாசி அமாவாசை எப்போது என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். அமாவாசை என்றாலே முன்னோர்களை வழிபட உகந்த நாள் என்று நம் அனைவருக்கும் தெரியும். மற்ற அமாவாசை நாட்களை விட புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும், புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையும் மிகவும் முக்கியமானதாக கூறப்படுகிறது.
ஆடி மாதம் வரக்கூடிய அமாவாசையை மகாளய அமாவாசை என்று கூறுவார்கள். மகாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன் வாழ்வில் அனைத்தும் நன்றாகவே நடக்கும். எனவே, இத்தனை சிறப்புமிக்க புரட்டாசி அமாவாசை எப்போது வருகிறது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
மகாளய பட்சம் என்றால் என்ன.? மகாளய பட்சம் 2024 எப்போது தொடங்குகிறது.?
புரட்டாசி அமாவாசை தேதி மற்றும் நேரம் 2024:
- புரட்டாசி அமாவாசை என்று கூறப்படும் மகாளய அமாவாசை ஆனது, இந்த ஆண்டு 2024 புரட்டாசி மாதம் 16 ஆம் தேதி அன்று வருகிறது. ஆங்கில தேதிக்கு அக்டோபர் 02 ஆம் தேதி புதன் கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் ஸர்வ மகாளய அமாவாசை, கரிநாள் ஆகும்.
- அன்றைய தினம் காலை 6:00PM மணி முதல் மதியம் 01:00PM மணி வரை தர்ப்பணம் கொடுக்கலாம்.
- மகாளய அமாவாசை அன்று, நாம் கொடுக்கும் தர்ப்பணம் ஆனது பெயர் தெரிந்த மற்றும் தெரியாத நம் முன்னோர்கள் அனைவரையும் சென்று சேரும். தாய்வழி, தந்தைவழி முன்னோர்கள் மட்டுமின்றி இறந்த நம் ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என மகாளய அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்கலாம். இதுவே, மகாளய அமாவாசையின் தனி சிறப்பு ஆகும்.
- இதனால் தான் தை அமாவாசை, ஆடி அமாவாசையை காட்டிலும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில் எந்தெந்த காரியங்கள் செய்யலாம், செய்ய கூடாது என்று தெரியுமா.?
மகாளய அமாவாசை என்றால் என்ன.?
மகாளய பட்ச காலத்தின் நிறைவு நாளே மகாளய அமாவாசை ஆகும். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தான் மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. மற்ற அமாவாசை நாட்களில் நாம் கொடுக்கும் தர்ப்பணம் ஆனது, மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு சென்று சேரும். ஆனால், இந்த புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசை தினத்தில் கொடுக்கும் தர்ப்பணம் ஆனது, தந்தைவழி, தாய்வழி முன்னோர்கள் மட்டுமின்றி, இறந்த உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவரையும் சென்றடையும்.
புரட்டாசி மாத முக்கிய விசேஷ, விரத நாட்கள்.!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |