Purattasi Amavasai Dhanam in Tamil | புரட்டாசி அமாவாசை தானம்
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் புரட்டாசி அமாவாசை அன்று செய்ய வேண்டிய தானம் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். முன்னோர்களை வழிபட உகந்த நாளாக அமாவாசை இருக்கிறது. அதிலும், குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை நாட்கள் மிகவும் முக்கியமான நாளாக இருக்கிறது. இந்த மூன்று அமாவாசைகளில் மிக முக்கியமானதாக கருதப்படுவது மகாளய அமாவாசை என்று கூறப்படும் புரட்டாசி அமாவாசை தான்.
மற்ற அமாவாசை நாட்களில் நாம் கொடுக்கும் தர்ப்பணம் தந்தைவழி முன்னோர்களுக்கு மட்டுமே சென்றடையும். ஆனால், ரட்டாசி அமாவாசையில் நாம் கொடுக்கும் தர்ப்பணம் தந்தைவழி மற்றும் தாய்வழி முன்னோர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள் என அனைவரையும் சென்றடையும். எனவே, மற்ற அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்கிறமோ இல்லையோ புரட்டாசி அமாவாசையில் தவறாமல் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். எனவே, முன்னோர்களின் சாபம் நீங்க, பித்ருக்கள் தோஷம் நீங்க, முன்னோர்களின் ஆசி கிடைக்க புரட்டாசி அமாவாசை நாளில் இந்த தானங்களை செய்ய மறக்காதீர்கள்.
புரட்டாசி அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்/தானங்கள்:
புரட்டாசி அமாவாசை கொடுப்பவர்கள் அல்லது புரட்டாசி அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் புரட்டாசி அமாவாசை அன்று சில பரிகாரங்களை செய்ய வேண்டும். இதன் மூலம், முன்னோர்கள் திருப்தி அடைவார்கள்.
புரட்டாசி அமாவாசை அன்று ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களுக்கு, உணவு தானம்,உடை தானம் போன்றவற்றை செய்வது மிகவும் நல்லது. நம் முன்னோர்களின் சாபம் நீங்கி, அவர்களின் அருள் கிடைக்க இதனை தவறாமல் செய்தல் வேண்டும். இதனை தவிர வேறு என்னென்ன தானங்கள் செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
மகாளய அமாவாசையில் செய்ய வேண்டிய முக்கிய வழிபாடுகள்
தானம் -1
தானங்களில் மிக சிறந்த தானமாக கருதப்படுவது பசு தானம். எனவே, அன்றைய தினம் பசு தானம் செய்யலாம். அந்த அளவிற்கு வசதி இல்லாதவர்கள், பசுக்களுக்கு அகத்திக்கீரை, தீவனம் போன்றவற்றை வாங்கி கொடுக்கலாம்.
தானம் -2
அரிசிமாவும் வெல்லமும் கலந்து எறும்பு புற்றுக்கு போட வேண்டும். முன்னோர்கள் கொடுத்த சாபமோ அல்லது கர்மவினையோ நீங்க எறும்புகளுக்கு உணவு தானம் அளிக்க வேண்டும்.
தானம் -3
குடும்பத்தில் ஒரு சுமங்கலி பெண் இறந்து இருந்தால் சுமங்கலி பெண் நினைவாக, கோவிலில் சுமங்கலி பெண் ஒருவருக்கு பூ, பொட்டு, புடவை வைத்து தானம் செய்யுங்கள்.
தானம் -4
புரட்டாசி அமாவாசை நாளில் எதை செய்ய முடியவில்லை என்றாலும் இந்த தானத்தை செய்ய மறக்காதீர்கள். குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரியை உணவாக அளிக்க வேண்டும்.
மகாளய பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது.?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |