புரட்டாசி மாத விரதங்கள்
தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதங்களில் ஒன்றாக கருதப்படுவது புரட்டாசி மாதம். இந்த புண்ணியம் மிக்க புரட்டாசி மாதத்தில் விரதங்கள் கடைபிடித்தால் அதிகம் புண்ணியம் கிடைக்கும். பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் மேற்கொள்ளும் விரதங்களால் ஏராளமான பயன்கள் நம்மை வந்து சேரும். புரட்டாசி மாதத்தில் நீங்கள் மேற்கொள்ளும் விரதங்கள் உங்களுக்கு கோடி நன்மைகளை தரும். அப்படி நீங்கள் புரட்டாசியில் மேற்கொள்ள வேண்டிய விரதங்கள் என்னென்ன என்று கீழே விரிவாக பார்ப்போம் வாருங்கள்.
வாழ்வில் நன்மைகள் பெற புரட்டாசி மாதத்தில் நாம் பலவகையான விரதங்களை மேற்கொள்ளலாம். புரட்டாசி மாத விரதங்கள் மூலம் நாம் பல்வேறு நற்பலன்களை பெற முடியும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விரதங்கள் பற்றியம் அதன் பலன்கள் பற்றியும் பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய விரதங்கள்:
மகாலெட்சுமி விரதம், தசாவதார விரதம், கதளி கவுரிவிரதம், அநந்த விரதம், பிரதமை, நவராத்திரி பிரதமை, ஷஷ்டி, லலிதா விரதம் போன்றவை விசேஷமானவை.
சித்தி விநாயக விரதம் :
சித்தி விநாயக விரதம் என்பது புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியில் விநாயகருக்காக மேற்கொள்ளும் விரதம் ஆகும். இந்த நாளில், விநாயகரை வழிபட்டால் காரிய சித்தி உண்டாகும். அதாவது நீங்கள் எடுக்கும் அனைத்து காரியங்களும் நிறைவேறும்.
சஷ்டி – லலிதா விரதம் :
பரமேஸ்வரி தாயை நினைத்து கடைப்பிடிக்கப்படும் விரதம் சஷ்டி – லலிதா விரதம். இந்த விரதத்தை புரட்டாசி மாத வளர்பிறையில் கடைப்பிடிக்கும் விரதங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த நாளில் நீங்கள் விரதம் மேற்கொள்வதால் பரமேஸ்வரி தாயின் சர்வ மங்களத்தையும் பெறலாம்.
அனந்த விரதம் :
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி தினத்தில் அனந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். பக்தியுடன் இந்த விரதத்தை கடைப்பிடித்தால், தீராத வினைகள் எல்லாம் தீரும். ஐஸ்வர்யங்கள் கிடைக்கும்.
அமுக்தாபரண விரதம் :
அமுக்தாபரண விரதத்தில் புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை சப்தமியில் கடைப்பிடிக்க வேண்டும். அமுக்தாபரண விரதத்தால் உமா மகேஸ்வரியின் அருள் கிட்டும். இந்த விரத வழிபாட்டால் சந்ததி செழிக்கும். அமுக்தாபரண விரத்தால் சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும். உமா – மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிறை வலக் கையில் கட்டிக் கொள்வதால், பரம்பரை தழைக்கும், சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும் என்பது நம்பிக்கை.
Purattasi Month Viratham Pooja Procedure in Tamil :
ஜேஷ்டா விரதம் :
ஜேஷ்டா விரதத்தை புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் இருக்க வேண்டும். ஜேஷ்டா விரதம் இருக்கும்போது அருகம்புல் கொண்டு சிவனையும், விநாயகரையும் வழிபட வேண்டும். இருவரையும் ஒரே நேரத்தில் வழிபடுவதால் கோடி நன்மைகள் கிட்டும். இதன்மூலம் குடும்பம் செழிக்கும்.
மகாலட்சுமி விரதம் :
புரட்டாசி மாதத்தின் வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியை பிரார்த்தித்து இருக்கும் விரதம் இது. ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் வறுமைகள் நீங்கும். வாழ்க்கை வளம் பெறும்.
கபிலா சஷ்டி விரதம் :
கபிலா சஷ்டி விரதத்தை புரட்டாசி மாத தேய்பிறை சஷ்டியில் மேற்கொள்ள வேண்டும். சூரியனை பூஜை செய்து, பழுப்பு வண்ணம் உடைய பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. இந்த விரதத்தால் ஏராளமான பலன்கள் கிட்டும்.
அள்ளிக்கொடுக்கும் புதன், இனி இந்த ராசிக்காரர்களுக்கு ஏறுமுகம் தான்….
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |