Karthikai Poornima Pattriya Thagavalkal In Tamil
இன்றைய பதிவில் கார்த்திகை பூர்ணிமா என்பதை பற்றி பார்க்க போகிறோம். கார்த்திகை பூர்ணிமா என்பது இந்துக்கள், சீக்கியர்கள், சைனர்களின் கலாச்சார விழாவாகும். இது முழு பௌர்ணமி நாள் அல்லது கார்த்திகை பூர்ணிமாவின் பதினைந்தாவது நாள் கொண்டாடப்படுகிறது. இதனை திரிபுரா பூர்ணிமா மற்றும் திரிபுராரி பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது.
சில சமயங்களில் தேவ தீபாவளி என்றும் அழைக்கப்படுகிறது. இது தெய்வங்களின் விளக்குகளின் திருவிழாவாக கருதப்படுகிறது. கார்த்திகை தீப திருநாள் இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் வெவ்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. இதனை மக்கள் மிக விமர்ச்சியாக கொண்டாடுகிறார்கள். கார்த்திகை மாதத்தை தாமோதர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் கார்த்திகை பூர்ணிமா என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க…..
கார்த்திகை பூர்ணிமா என்றால் என்ன ?
கார்த்திகை பூர்ணிமா பண்டிகை இந்து மதத்தில் புனிதமாக கருதப்படுகிறது. இது தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தின் இறுதியில் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை பூர்ணிமா மத கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல் கலாச்சாரம் மற்றும் சமூக கண்ணோட்டத்திலும் பார்க்கபடுகிறது. இந்த நன்னாளில் விரதம் இருத்தல், விளக்கேற்றுதல், கங்கையில் நீராடுதல் மற்றும் வழிபாடு செய்து தானம் செய்தல் ஆகியவற்றை குறிக்கிறது.
2025- இல் கார்த்திகை பூர்ணிமா எப்போது?
இந்த வருடம் கார்த்திகை பூர்ணிமா 2025 நவம்பர் 05 புதன்க்கிழமையில் கொண்டாடப்படுகிறது. மங்களகரமான நேரம் நவம்பர் 4 அன்று காலை 10.36 AM மணிக்கு தொடங்கி நவம்பர் 5 மாலை 6.48 PM மணி வரை இருக்கும்.
கார்த்திகை பூர்ணிமா நன்மைகள் :
- இந்த நாளில் செய்யப்படும் அணைத்து விதமான நன்கொடைகள், தானம் செய்தல் போன்றவை அனைத்தும் உங்களுக்கு புண்ணியத்தை உண்டாக செய்து அதிக பலன்களை அளிக்கும்.
- இந்த நாளில் நீங்கள் விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் நீங்கள் மோட்சம் அடைந்து மறுபிறவி எடுப்பீர்கள்.
- சிவபெருமான் திரிபுராசுரனை கொன்ற நாள் என்பதால் , தீமையை நன்மை வென்ற நாளாக கருதப்படுகிறது.
- கார்த்திகை பூர்ணிமா நாளில் நீங்கள் செய்யும் நன்மைகள் அனைத்தும் உங்களுடைய பாவங்களை நீக்கி புண்ணியம் கிடைக்க செய்யும்.
- கங்கையில் நீராடுதல் மற்றும் விளக்கேற்றுதல் ஆகிய அனைத்தும் நீங்கள் செய்யும் புனித செயலாக கருதப்படுகிறது.
கார்த்திகை தீபம் அன்று எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்.?
கார்த்திகை பூர்ணிமாவின் முக்கியத்துவம் :
- கார்த்திகை பூர்ணிமா இந்துக்களின் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். கார்த்திகை பூர்ணிமா கடவுளின் தீபங்களின் பண்டிகையாக கருதப்படுகிறது.
- இந்துக்களுக்கு கார்த்திகை மாதம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இந்த மாதம் விஷ்ணு மற்றும் சிவபெருமானுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது.
- கார்த்திகை பூர்ணிமா நாளில் சொர்க்கத்திலிருந்து கடவுள்கள் இறங்கி வந்து கங்கை , யமுனை மற்றும் நர்மதை கங்கை கோதாவரி போன்ற நதிகளில் இருப்பதாக இந்துக்கள் நம்புகிறார்கள்.
- ஆகவே,கார்த்திகை பூர்ணிமா நாளில் பக்தர்கள் அன்று ஆறுகளில் புனித நீராடுகிறார்கள். செழிப்பை ஈர்ப்பதற்காக ஆற்றங்கரைகளில் சிறப்பு பூஜை செய்கின்றன.
- கார்த்திகை பூர்ணிமா நாளில் கிருஷ்ணனும், ராதையும் ராசலீலா எனப்படும் புனித நடனத்தை நிகழ்த்தியதாக கருதப்படுகிறது.
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |













