சச யோகம்
ஆன்மிகத்தில் கிரக பெயர்ச்சிகள் என்பது ஒவ்வொரு ராசியிலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கும் சஞ்சரிக்கும். இப்படி சஞ்சரிக்கும் பொழுது 12 ராசிகளுக்கும் நன்மையை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு மட்டும் தான் அதிகமான நன்மையை தர போகிறது. ஒவ்வொரு ராசியிலும் சனி இரண்டரை முதல் 3 ஆண்டு காலம் வரை இருக்கும். இந்த ஆண்டு கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரித்து வருகிறார். அந்த வகையில் சனி, கும்பத்தில் சச யோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோன்று, இப்பொழுது துலாம் ராசியில் சூரியனும் புதனும் சஞ்சரிக்கிறது. இந்த இணைவு புத ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகிறது. புத ஆதித்ய யோகம் மற்றும் சசி யோகம் இரண்டுமே, ஐந்து ராசிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
புத ஆதித்ய யோகம் மற்றும் சச யோகத்தால் நன்மை பெறும் ராசிகள்:
கும்ப ராசி:
புத ஆதித்ய யோகம் மற்றும் சச யோகத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். சம்பளத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். இதுவரையில் நீங்கள் ஏதவது மன குழப்பத்தில் இருந்தால் அவை நீங்கி விடும்
மகர ராசி:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியானது சாதகமாக இருக்கும். உங்களுக்கு பிடித்த வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. நீண்ட நாட்களாக வராமல் இருந்த தொகை கைக்கு கிடைக்கும். பணவரவு அதிகமாக கிடைக்கும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள்.
அட்ரா சக்க சனி பெயர்ச்சியால் 2025 வரை அமோகமான வாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர்கள்
துலாம் ராசி:
துலாம் ராசியில் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த காலம் உகந்ததாக இருக்கும். வியாபாரத்தில் இதுவரையில் எதிர்ப்பார்க்காத லாபம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களின் எல்லா செயல்களுக்கும் வாழ்க்கை துணை பக்க பலமாக இருப்பார்கள்.
கடக ராசி:
கடக ராசிக்கார்கள் வணிகங்களில் இந்த நேரத்தில் முதலீடு செய்வது நல்ல லாபத்தை கொடுக்கும். சொத்து வாங்குவதற்கு சாதகமாக இருக்கிறது. அது போல விற்க நினைத்தாலும் இந்த காலம் உகந்ததாக இருக்கும். வீட்டில் செல்வ நிலை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் வெற்றி கிடைக்கும்.
ரிஷப ராசி:
ரிஷப ராசிகாரர்களுக்கு இந்த யோகத்தால் பல் விதமான நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுடைய காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் கைக்கு கிடைக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |