புதன் பெயர்ச்சி
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி நிலையை பொறுத்தே 12 ராசிகளின் பலன்களும் கூறப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியினை மாற்றிக்கொண்டே இருக்கும். இதனால் 12 ராசிகாரர்களின் வாழக்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். கிரகங்களின் ராசி மாற்றம் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன்களை அளிக்கும். எனவே, அந்த வகையில் வியாபாரம், கல்வி, பேச்சு மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றின் தலைவனாக கருதப்படும் புதன், அக்டோபர் 19 ஆம் தேதி துலாம் ராசிக்கு பயணிக்கிறார். துலாம் ராசியில் இருக்கும் புதன் நவம்பர் 6ம் தேதி விருஷக ராசிக்கு பயணிக்கிறார். இதன் மூலம் அக்டோபர் 19 ஆம் தேதி முதல் இந்த 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமான பலன்களை பெறப்போகிறார்கள். அந்த அதிர்ஷ்டமான 4 ராசிக்காரர்கள் யார் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
புதன் பெயர்ச்சியால் நன்மைகளை சந்திக்க போகும் ராசிகள்:
கன்னி ராசி:
கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் நிலையானது சாதகமான பலன்களை அளிக்கும் வகையில் இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுநாள் வரையிலும் காணப்படாத நல்ல லாபம் இருக்கும். மேலும் பொருளாதார நிலை மேலோங்கி காணப்படும். அதேபோல் புதிய முயற்சிகள் வெற்றி அளித்து குடும்பத்தில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும் என்று ஜோதிடத்தின் படி கூறப்படுகிறது.
தனுசு ராசி:
புதன் பகவான், தனுச ராசியின் 5- வது வீட்டில் உதயமாகிறார். இதனால், தனுச ராசிக்காரர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். பணியிடத்தில் வருமான உயர்வு உண்டாகும். மேலும், இதுவரை உங்கள் கைக்கு வராமல் சிக்கிய பணம் உங்களிடம் வந்து சேரும். குழந்தைகளால் நற்செய்திகளை பெறுவீர்கள். எழுத்து மற்றும் பேச்சு தொடர்பான வேலை செய்பவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும்.
மகர ராசி:
மகர ராசிக்காரர்களுக்கு புதன் பகவானால் அனைத்து விதமான மங்கள நன்மைகளும் கிடைக்க கூடிய நாட்களாக வரும் நாட்கள் இருக்கும். நிதிநிலைமை சீராகும். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பும் பதவியும் உயரும். பணியிடத்தில் பனி உயர்வு மற்றும் சம்பள உயர்வு இருக்கும். மாணவர்கள் அவர்களின் கனவுகளை நோக்கிய உங்கள் பயணம் சீராக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும்.
கும்ப ராசி:
புதன் பெயர்வு கும்ப ராசிக்காரர்களுக்கு பல்வேறு விதமான அதிர்ஷ்டங்களை வழங்க போகிறது. வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பணி உயர்வுக்கு வாய்ப்புள்ளது. உங்கள் தொழில் அடுத்த நிலையை அடைய நீங்கள் புதிய முயற்சிகளை எடுக்க சிறந்த நாளாக இருக்கும்.பண வரவில் குறைவிருக்காது. சேமிப்பு அதிகரிக்கும்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 வரை சுருக்கமான பலன்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |