ராகு கேது தோஷம் உள்ளவர்கள் செல்ல வேண்டிய கோவில்கள்
ஜாதகத்தில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி போலவே ராகு கேது பெயர்ச்சியும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த ராகு கேது ஒருவருக்கு இருந்தால் அவர்களின் திருமண வாழ்க்கையில் பல தடைகள் ஏற்படலாம். மேலும் வரன்கள் அமைவதற்கே பல தடைகள் ஏற்படும். நமது சொந்த காரர்களே நிறைய பேர் இருப்பார்கள். 30 வயது இருக்கும், அதனால் அவர்களிடம் ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை என்று கேட்போம். அதற்கு அவர்கள் ராகு கேது இருக்கு பொண்ணு அமையவே மாட்டிக்கிறது என்று கூறுவதை கேட்டிருப்போம். அதுமட்டுமில்லாமல் ஒருவரது ஜாதகத்தில் ராகு கேது இருந்தால் அவர் திருமணம் செய்பவர்களுக்கும் ராகு கேது தோஷம் இருக்க வேண்டும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அதனால் உங்களின் ஜாதகத்தில் ராகு கேது தோஷம் இருந்தால் அதனை நீக்கி திருமணம் விரைவில் நடைபெற செல்ல வேண்டிய கோவிலை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
ராகு கேது தசம் உள்ளவர்கள் செல்ல வேண்டிய கோவில்கள்:
புதுக்கோட்டை:
புதுக்கோட்டைக்கு பக்கத்தில் உள்ள திருமயம் உள்ளது. இந்த ஊரிலிருந்து 15 கிலோ மீற்றர் தூரத்தில் பேரையூர் உள்ளது. இந்த ஊரில் உள்ள மூலவர், நாகநாதர். அம்மன், பிரகதாம்பாள் ஆலயங்களுக்கு சென்று வர வேண்டும்.
கும்பகோணம்:
கும்பகோணத்திலிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருநாகேஸ்வரம். நாகேஸ்வரரையும், பிறையணிவாணுதலாள் அம்மனையும், இரண்டாம் பிராகாரத்திலுள்ள நாகராஜரையும் வணக்க வேண்டும்.
காரைக்கால்:
கும்பகோணம் செல்லும் வழியில்திருப்பாம்புரம் என்னும் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள குளத்தில் குளித்து விட்டு அங்குள்ள நாகராஜருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் ராகு கேது தோஷம் நீங்கும்.
நன்னிலம்:
நன்னிலத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீ வாஞ்சியம் திருவாகீந்தபுரம் என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள ஆதிஷேஷனை வழிபட்டால் ராகு கேது தோஷம் நீங்கும்.
சென்னை:
சென்னையிலிருந்து 110 கி.மீ., திருப்பதியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள காளஹஸ்தி என்னும் கோவில் உள்ளது. இந்த கோவிலானது ராகு-கேது என்று பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கிறது. அதனால் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் ராகு கேது தோஷம் நீங்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |