வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ராகு கேது பெயர்ச்சியால் வாழ்க்கையில் கஷ்டத்தை சந்திக்க போகும் ராசிகள் 2025

Updated On: April 26, 2025 12:37 PM
Follow Us:
ragu kethu peyarchiyal kastatha santhikka pogum rasigal 2025
---Advertisement---
Advertisement

ராகு கேது பெயர்ச்சி 2025

பொதுவாக ஆன்மிகத்தில் குறிப்பிட்ட நாளுக்கு தங்களின் ராசிகளை மாற்றி கொண்டே இருக்கும். அப்படி மாற்றும் கொள்ளும் போது எல்லா ராசிகளிலும் பார்வை பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டும் தான் அதிர்ஷ்டமும், கஷ்டமும் ஏற்படும். அந்த ஜாதகத்தில் ராகு கேது முக்கியமான கிரங்கங்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் ராகு கேது பெயர்ச்சி மே 18ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த பெயர்ச்சியின் போது ராகு கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளனர். இந்த கிரங்ககளின் மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் கஷ்டத்தை சந்திக்க போகிறார்கள். அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்ளுங்கள்.

மீன ராசி:

ராகு கேது பெயர்ச்சி

ராகு கேதுவின் பெயர்ச்சியானது மீன ராசிக்காரர்களுக்கு எல்லா விதத்திலும் சாதகமற்றதாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் எந்த செயல் செய்தாலும் அதனை ரொம்ப கவனமாக செய்ய வேண்டும். யாரையும் முழுமையாக நம்பாதீர்கள். யாரிடமாவது பேசும் போது சண்டை ஏற்பட்டால் அவர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். ஏனென்றால் அவர்கள் மேல் தப்பு இருந்தால் அவை உங்கள் பேரில் தான் முடியும். நீங்கள் வாகனங்களில் சென்றால் ரொம்ப  கவனமாக செல்ல வேண்டும். பணம் உங்களிடம் அதிகமாக காணப்பட்டாலும் அவை போகும் இடம் தெரியாத அளவுக்கு செலவு ஆகும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். முக்கியமாக வயிறு மற்றும் இதயம் போன்ற உறுப்புகளில் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் அக்கறை செலுத்த வேண்டும். உங்களின் அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சி செய்வது நல்லது.

கன்னி ராசி:

ராகு கேது பெயர்ச்சி 2025

கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியானது உங்கள் வாழ்க்கையில் எந்த பக்கம் சென்றாலும் அங்கு கஷ்டத்தை சந்திக்க நேரிடும். வீட்டிலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ உங்களுக்கென்று விதிமுறைகள் இருக்கும். அதனை மீறாமல் நடந்து கொள்வது நல்லது. உங்களின் எதிரிகள் வேண்டும் என்றே வம்பு செய்வார்கள். அவர்களிட நீங்கள் எந்த விதமான வாக்குவாதமும் செய்ய வேண்டாம். உங்களின் பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். அவர்களின் ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சனையை சந்தித்தால் அதனை லட்சியம் செய்யாமல் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது அவசியமானது. குழந்தைகலின் எதிர்காலத்தை பற்றி சிந்தனை அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் சரி, பண விஷயத்திலும் சரி ரொம்ப ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.

50 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் ராஜயோகம் இதனால் 3 ராசிகளுக்கு யோகம் அடிக்க போகுது

சிம்மம் ராசி:

ragu kethu peyarchiyal kastam

ராகு கேது பெயர்ச்சியானது சிம்ம ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்த கூடிய ஒன்றாக இருக்கிறது. உங்களின் ராசியில் ஏற்கனவே அஷ்டம சனி நடப்பதால், அதே சமயம் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களை தராது. உங்களின் உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை உடனே கவனிப்பது நல்லது. இல்லையென்றால் அவை பெரிதாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. பண விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் ஏதேனும் பணம் தொடர்பாக முடிவெடுத்தாலோ அல்லது யாருக்காகவாது கொடுப்பதாக இருந்தாலோ நம்பிக்கை உள்ளவரை முன்வைத்து செயல்படுவது நல்லது. நீங்கள் சொந்தமாக தொழில் செய்வதாக இருந்தால் அதற்கான வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்று முடிவெடுக்க வேண்டும்.

மேஷ ராசி:

ragu kethu peyarchiyal kastam

மேஷ ராசிக்கு ராகுகேது பெயர்ச்சியானது உங்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமில்லாமல் அன்றாட செயல்களை செய்வது கூட சவாலானதாக இருக்கும். பணம் விஷயத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் பண விஷயத்தில் யாரையும் நம்பாதீர்கள். வங்கியில் ஏதேனும் கடன் இருந்தால் அவற்றை முடிந்தவரை திருப்பி செலுத்த பாருங்கள். மேலும் கடன் வாங்குவதைத் தவிர்த்திடுங்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்காது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகுவீர்கள். எதிர்காலத்தை பற்றி சிந்தனை செய்வீர்கள், இவர் உங்களுக்கு நிம்மதியை தராது. பிள்ளைகளிடம் விட்டு கொடுத்து செல்லுங்கள், அவர்களிடம் கண்டிப்புடன் இருந்தால் அவர்கள் விபரீத முடிவு எடுப்பதற்கு வாய்ப்புள்ளது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now