ராசியில் ராகு இருந்தால் என்ன பலன்
ஜோதிடத்தின் படி ராகுவின் பலன் மற்றும் பார்வை என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. அந்த வகையில் அனைத்து ராசிகளுக்கும் வெவ்வேற மாதிரியான பலன்களை தான் அளிக்கிறார். ஆனால் ராகு பகவானுக்கு பிடித்த ராசியாக 2 உள்ளது. ராகுவிற்கு பிடித்த ராசியாக இருப்பதால் பல நற்பலன்களை இது கொண்டு உள்ளது. அந்த வகையில் இன்றைய பதிவில் ராகுவிற்கு பிடித்த இந்த 2 ராசிகளை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
ராகுவிற்கு பிடித்த ராசிகள்:
இந்த ராகுவானது ஒரு சிலர் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமை கலந்த பலனை அளித்து இருக்கலாம். ஆனால் ராகு அவருக்கு பிடித்த ராசிகளுக்கு எப்போதும் நன்மையினை மட்டும் தன் அளிக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் பல வெற்றிகளையும் தருகிறது.
செவ்வாய் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை அமோகமாக மாற போகிறது..
விருச்சிகம்:
ராகுவிற்கு பிடித்த ராசியாக விருச்சிகம் உள்ளது. இந்த விருச்சிக ராசிக்கு மட்டுமே அவருடைய மொத்த ஆசீர்வாதம் முழுவதையும் அளித்து வருகிறார். இந்த ராசியில் உள்ளவர்கள் தொழில் சார்ந்த விஷயத்தில் முன்னேற்றத்தை அடையாக கூடியவராக இருப்பார்கள். மேலும் வாழ்க்கையில் பல வெற்றிகளை பெறக்கூடியவராகவும் காணப்படுவார்கள்.
அதிலும் இந்த ராசியில் இருப்பவர்கள் நல்ல வருமானதோடு இருப்பார். அதேபோல் அவர் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும், செழுமையுடனும் வாழ்ந்து வருகிறார்கள். இவரது புகழ் உலகம் முழுவதும் பரவி இருக்கும்.
சிம்மம்:
ராகுவிற்கு மிகவும் பிடித்த ராசியாக சிம்மம் ராசி உள்ளது. இந்த சிம்மம் ராசியை பொறுத்த வரை எப்போதும் ராகுவின் ஆசிர்வாதத்தினால் அவருடைய வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகள் வராமல் இருக்கும். இவரது வாழ்க்கையில் அடுத்த அடுத்த படியாக பல வெற்றிகள் வந்து கொண்டே இருக்கும். அதுமட்டுமில்லாமல் ராகுவின் ஆசியால் எப்போதும் உடல் ஆரோக்கியமாகவும், மன ஆரோக்கியாகவும் இருக்கும். அதுமட்டுமில்லாமல் ராகு சிம்ம ராசியில் உட்காரும் பொழுது நல்லதே நடக்கும். அதிலும் சிம்ம ராசியில் பிறந்தவர்கள் எல்லா விதமான இன்பத்தையும் அனுபவிக்கும் நபராக இருப்பார்கள். இவர்கள் திடீரென பணம் மற்றும் சொத்துக்களை பெறக் கூடியவராக இருப்பார்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |