Rahu Guru Mudivu in Tamil
நவகிரகங்கள் அனைத்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். அதாவது ஒரு கிரகம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது அதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும். அந்த வகையில் தற்போது ராகு குரு பெயர்ச்சி பிரிய போகிறது. அதாவது, தற்போது மேஷ ராசியில் ராகுவும் குருவும் சேர்க்கையில் உள்ள நிலையில் வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி ராகு மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய போகிறார். அதாவது ராகு குருவை விட்டு பிரிந்து செல்கிறார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது. எனவே, ராகு குரு பிரிவால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எதுவென்று பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
துலாம் ராசி:
துலாம் ராசிக்காரர்கள், ராகு குரு பிரிவால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப்போகிறது. அதுமட்டுமில்லாமல் இக்காலத்தில் செய்யும் முதலீடுகள் உங்களுக்கு வெற்றியை உண்டாக்கும். கணவன் மனைவிடையே அன்பு அதிகரிக்ககூடும். மேலும், உங்கள் நண்பர்கள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள்.
ஆங்கிலப் புத்தாண்டு 2024-ல் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானா..!
மேஷ ராசி:
மேஷ ராசிக்காரர்கள், ராகு குரு பிரிவால் அதிர்ஷ்டமான பலன்களை பெறப்போகிறார்கள். முக்கியமாக தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள். இக்காலத்தில் எதிர்பாராத அளவிற்கு பணவரவு வரக்கூடும். இக்காலத்தில் செய்யும் முதலீடுகள் உங்களுக்கு வெற்றியை உண்டாக்கும். மேலும், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.
சிம்ம ராசி:
ராகு குரு பிரிவால், சிம்ம ராசிக்காரர்கள் சுப யோகத்தை பெறப்போகிறார்கள். முக்கியமாக தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள். இக்காலத்தில் உங்களின் ஆரோக்கியம் மேம்பட்டு காணப்படும். அதுமட்டுமில்லாமல், உங்கள் குழந்தைகளால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதேபோல், இக்காலத்தில் நீங்கள் செய்யும் முதலீடு உங்களுக்கு லாபத்தை அளிக்கும்.
தனுசு ராசி:
தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு குரு பிரிவால் பல்வேறு விதமான நற்பலன்கள் கிடைக்கக்கூடும். நீங்கள் எதிர்ப்பாராத நேரத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் வரக்கூடும். அதேபோல், வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும், வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, தனுசு ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமான பலன்களை பெறுவார்கள்.
வீட்டில் பணமழை கொட்ட இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள் போதும்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |