ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம்..!

ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம்

ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம்..!

இந்த ராகு, கேது ஆகிய இரு கிரகங்களால் ஏற்படும் தோஷங்களைச் சர்ப்ப தோஷம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். இந்த ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம் பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களுமே நாகங்கள். இந்த ராகு, கேது ஆகிய இரு கிரகங்களால் ஏற்படும் தோஷங்களைச் சர்ப்ப தோஷம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஒருவர் ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளதா என்பதை ராகு, கேது முதலிய கிரகங்கள் எந்த வீட்டில் உள்ளன என்பதை வைத்து அறிந்து கொள்ள முடியும்.

பாம்பின் தலையை ராகு என்றும் உடலைக் கேது என்றும் குறிப்பிடுகிறார்கள். வானில் இருக்கும் ராகுவும், கேதுவும் பின்னோக்கி நகர்வதாக அறிவியலார் கூறுகின்றனர். ஆகையால் இவ்விரு கிரகங்களையும் சாயாகிரகங்கள் என்கிறது ஜோதிட நூல்கள். ராகு கேது தோஷங்களால் ஏற்படும் விளைவுகள், பரிகாரங்கள் ஆகியவற்றையும் ராகுவைப் பற்றியும் அறிவோம்.

நாக தோஷம் நீங்க பரிகாரம் மற்றும் காரணங்கள்..!

சர்ப்ப தோஷம் பலவித வியாதிகளை உண்டாக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்காது. ராகுத் தலமாக திருநாகேஸ்வரம் உள்ளது. கேது தலங்களாக ஸ்ரீ காளகஸ்தி, பெரும் பள்ளம் ஆகியவை உள்ளன. இரண்டு கிரகங்களையும் வழிபடும் தலம் திருப்பேரை.

கேதுவைத் திருப்திப்படுத்த மொச்சைப் பயிரைத் தானமாக அளிக்கலாம். இவரை உபாசிப்பவன் கீழான ஆசனத்தில் அமரக் கூடாது. கருகிப் போன ஆகாரங்களை உண்ணக் கூடாது. இவரை உபாசிப்பதால் அந்தஸ்து உயரும்.

ஆடி மாதம் சுக்கில பட்சத்தில் கேது உதித்தார். ருத்திரனுடைய நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமையாகும். இந்த விசேஷ நாட்களில் கேதுவை வழிபடுவது சிறப்புடையதாகும்.

இந்த ராகு கேது இந்த இரண்டு கிரகங்கள் நம்மை பயமுறுத்துவது அல்ல. உரிய காலகட்டங்களில் முறையான பரிகாரங்களை செய்வதன் மூலம் நற்பலன்களை நிச்சயமாக அடைய முடியும்.

செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்..!

ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம்

சரி வாங்க ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம் சிலவற்றை இப்போது நாம் தெரிந்து கொள்வோம் வாங்க..!

ஆன்மிக தகவல்கள் – ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம்:1

காளாஸ்திரி சென்று ராகு காலத்தில் பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்து வந்தால் சர்ப்ப தோஷம் விலகும்.

கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சென்று ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்தும், அர்ச்சனை செய்தும் தோஷ நிவர்த்தி பெறலாம்.

ராகு காலங்களில் பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்யலாம்.

ஆன்மிக தகவல்கள்  – ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம் :2

அம்மன், துர்க்கை, சரபேஸ்வரர் இவர்களுக்கு ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தால் தோஷம் விலகும்.

ராமேஸ்வரம் சென்று கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்து வந்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும்.

காஞ்சீபுரத்தில் உள்ள சித்திரகுப்தன் ஆலயம் சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வந்தால் கேது தோஷம் விலகும்.

ஆன்மிக தகவல்கள்  – ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம் :3

தினசரி விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் தோஷம் விலகும். சங்கடஹர சதுர்த்தி அன்று அருகம்புல் மாலை விநாயகருக்கு சாத்தி வழிபட்டு வந்தால் தோஷம் அகலும்.

ராகு தோஷம் உடையவர்கள் தூங்கும்போது தலையணைக்கடியில் அருகம்புல் வைத்தும், கேது தோஷம் உடையவர்கள் தர்ப்பைப் புல்லையும் தலையணைக்கடியில் வைத்துப் படுத்து உறங்கினால் தோஷங்கள் அகலும். 9 வாரம் செய்யவும். அதன்பிறகு அந்த புல்லை கடலில் விட்டு விடவும்.

வீட்டில் விளக்கேற்றி ராகு, கேதுவின் காயத்ரி மந்திரங்களை சொல்லி வந்தால் தோஷங்கள் விலகும்.

தினமும் ஒரு ஆன்மீகம் பற்றிய தகவல்கள்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்