ராகு கேது பரிகாரம் செய்ய உகந்த நாள் எது.?

Advertisement

 ராகு கேது உகந்த நாள்

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ராகு கேது பரிகாரம் செய்ய உகந்த நாள் எது என்பதை பின்வருமாறு தெரிந்துகொள்ளலாம் வாங்க. ஜோதிடத்தின்படி, ஆன்மீகத்தில் ராகு கேது தோஷம் இருந்தால் திருமண தடை ஏற்படும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்றே. ராகு கேது தோஷம் என்பது ஜாதகத்தில் ராசி அல்லது லக்னத்திற்கு 2,7 ஆம் இடங்களில் ராகு கேதுக்கள் இருப்பதை குறிக்கிறது. அதாவது, நிழல் கிரகம், சர்ப்பங்கள் எனப்படும் ராகு கேதுக்கள் 1, 2, 5, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் திருமணம் தடைப்படும் என்று சொல்லப்படுகிறது.

இதனால், ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி ராகு கேது தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரத்தை எப்போது செய்ய வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்து கொள்ளும்  விதமாக இப்பதிவில் ராகு கேது பரிகாரம் செய்ய உகந்த நாள் (Rahu Ketu Pariharam Seiya Ugantha Naal) விவரித்துள்ளோம்.

ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம்..!

ராகு கேது பரிகாரம் செய்ய உகந்த நாள்:

 ராகு கேது பரிகாரம் செய்ய உகந்த நாளாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிமை இருக்கிறது.  இந்த செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் வரும் ராகு காலத்தில் ராகு கேது பரிகாரம் செய்வது சிறந்ததாக கூறப்படுகிறது. 

ராகு கேது பரிகாரம் செய்ய உகந்த நாள்

அதேபோல், ராகு கேது பரிகாரம் செய்ய உகந்த நட்சத்திரமாக சுவாதி நட்சத்திரம், சதயம் நட்சத்திரம் மற்றும் திருவாதிரை நட்சத்திரம் உள்ளது. இந்த நட்சத்திரத்தில் ராகு கேது பரிகாரம் செய்யலாம்.

கேதுவின் தாக்கம் அதிகமாக இருந்தால், அசுவினி நட்சத்திரம், மகம் நட்சத்திரம் மற்றும் மூலம் நட்சத்திரம் ஆகிய நட்சத்திரத்தில் கேது பரிகாரம் செய்யலாம். ஏனென்றால் இந்த நட்சத்திரங்களின் அதிபதியாக கேது பகவான் இருக்கிறார்.

ராகு கேது உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வந்தால் சீக்கிரம் கல்யாணம் நடக்கும்..

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement