Rahu Ketu Peyarchi 2023 – 2025 Palangal in Tamil
ராகு கேது என்பது ஜோதிடத்தில் நிழல் கிரகம் என்று சொல்லப்படுகிறது. நாம் இந்த கிரகத்தை நேரடியாக பார்க்க முடியவில்லை என்றாலும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் இவை எல்லாம் இந்த ராகு கேது கிரகத்தினால் தான் ஏற்படுகிறது என்று சொல்லப்படுகிறது. மேலும் கிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக ராகு தேது விளக்குகிறது. இவற்றில் ராகுவை விட அதிக சக்தி வாய்ந்த கிரகமாக கேது பகவான் விளங்குகிறார். இந்த இரண்டு கிரகங்கள் நமது வாழ்க்கையில் மிக பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. மற்ற கிரகங்கள் கொடுக்க கூடிய பலன்களை தடுக்க கூடியதும், மற்ற கிரகங்கள் கொடுக்க கூடிய பலன்களை அதிகப்படுத்த கூடியதும் இந்த ராகு கேது கிரகங்கள் தான். இந்த ராகு கேது கிரகங்களுக்கு ஜோதிடத்தில் தனிப்பட்ட வீடுகள் இல்லை என்றாலும், இந்த ராகு கேது கிரகங்கள் எந்த வீட்டில் உள்ளதோ, அந்த வீட்டின் அதிபதியின் பலனை ராகு கேது கிரகங்கள் தருவதற்கான வலிமையை பெற்றிருக்கும். அந்த வகையில் புரட்டாசி மாதம் 21-ஆம் தேதி அதாவது அக்டோபர் 8 ராகு கேது பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. இந்த பெயர்ச்சியால் எந்த ராசிக்கு என்ன பலன் என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
ராகு கேது பெயர்ச்சி 2023 – 2025 – Rahu Ketu Peyarchi 2023 – 2025 Palangal in Tamil:
ரேவதி நட்சத்திரம் 4-ஆம் பாகத்தில் மீன ராசியில் ராகுவும், சித்திரை 2-ஆம் பாகத்தில் அதாவது கன்னி ராசியில் கேது பகவானும் சஞ்சாரிக்கின்றன. ஆக இந்த ராகு கேது பெயர்ச்சியானது சூப்பர் ஒன்றரை ஆண்டுகள் இந்த ராசிகளில் வீற்றிருந்து பலன்களை வழங்க உள்ளனர். சரி பனிரெண்டு ராக்களுக்கான ராகு கேது பெயர்ச்சியின் பலன்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
மேஷம்:
மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மிக சிறந்த பெயர்ச்சியாகி இருக்கும். ராகு உங்களுடைய ராசியில் 12-ஆம் வீட்டில் இருக்கிறார் ஆக வெகு நாட்களாக நடைபெறாத காரியங்கள் இனி வரும் காலங்களில் கண்டிப்பாக நடந்து முடியும். பணம் வரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அதேபோல் கேது பகவான் உங்கள் ராசியில் 6-ஆம் வீட்டில் இருக்கிறார். உங்கள் ராசியில் ஆறாம் இடம் என்பது எதிர்ப்பு, வியாதி, கடன் போன்றவற்றை குறிக்கும் இடமாக கருதப்படுகிறது. ஆக இவற்றையெல்லாம் கேது பகவான் கட்டுப்படுத்துவார் என்று சொல்லலாம். ஆக மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி என்பது மிகவும் அற்புதமான பெயர்ச்சியாகி இருக்கும்.
ரிஷபம்:
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்திற்கு ராகு வருகிறார் ஆக உங்கள் பொருளாதாரத்தில் மிகுந்த ஏற்றம் காணப்படும். மற்றவர்களிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுத்துவிடுவீர்கள். கேது 5-ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருகின்றார். ஆக பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு கேது வருகின்ற போது பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு என்னென்னல்லாம் கிடைக்க வேண்டுமோ அவையெல்லாம் கிடைக்க கூடும்.
மிதுனம்:
மிதுனம் ராசிக்காரருக்கு ராகு 10-ஆம் இடத்திற்கு வருகின்றார் ஆக உங்கள் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். தொழில் மேன்மையடைவீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு மேலும் நற்பலன்களை வழங்க இரணியூர் ஆட்கொண்டநாதர் கோயில் சென்று தெய்வங்களை வணங்கிவிட்டு வருவது மிகவும் சிறந்த பலன்களை வழங்குவார்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அக்டோபர் 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் பண கஷ்டம் அதிகரிக்கப் போகுது..
கடகம்:
கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியானது ஓரளவு நன்றாக இருக்கும். சகோதரர்களினால் சில பிரச்சனைகள் ஏற்பாடு பிறகு அந்த பிரச்சனை சரியாகிவிடும். 9-ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு ராகு வருவதினால் உங்களுக்கு எல்லா வகையான பாக்கியங்களையும் வழங்குவார் ராகு. அதேபோல் மூன்றாம் இடத்திற்கு கேது பகவான் வருகிறார் மூன்றாம் இடம் என்பது வெற்றிகள் ஸ்தானம் ஆகும். அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவார்கள். இந்த பெயர்ச்சியில் நீங்கள் முழுமையான பலன்களை பெற சனிக்கிழமை தோறும் அஞ்சினீயரை வழிபடுவது மிகவும் சிறந்த பலன்களை பெறலாம்.
சிம்மம்:
சிம்மம் ராசிக்காரர்களு அஷ்டமத்தில் ராகு இரண்டில் கேது. ஆக இது உங்களுக்கு கொஞ்சம் கடுமையான காலம் என்று சொல்லாம். ராகு கேது பெயர்ச்சியினால் உங்களுக்கு பல பாதிப்புகள் வந்தாலும் கூட. குருபார்வையினால் உங்களுக்கு கோடி நன்மைகள் உண்டாக்கும். இந்த கால கட்டத்தில் உங்களுக்கு எந்த காரியமும் உடனடியாக நடந்து முடியாவிட்டாலும் கடைசி நேரத்தில் அந்த காரியம் கைகூடிவிடும். மேலும் இந்த கால கட்டத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்திவிட வேண்டும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது மிகவும் சிறந்து.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களே இந்த ராகு கேதுவின் பெயர்ச்சியினால் நீங்கள் சர்ப்ப தோஷத்தில் இருக்கிறீர்கள். ஆக உங்கள் வாழ்கை துணையுடன் சில பிரச்சனைகள் ஏற்படும். வீண் செலவுகள் அதிகமாக இருக்கும். இவற்றையெல்லாம் தவிர்க்க ராகுவிற்கு உரிய துர்க்கையம்மனை வழிபடுவது மிகவும் சிறந்தது.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியின் போது நல்ல வாழ்க்கை அமைய போகிறது. இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் இந்த கால கட்டத்தில் விலகும். பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி காணப்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சகிக்கப்படும். உத்தியோகம் மற்றும் தொழில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றது போல் பலன்கள் கிடைக்கும். உங்களுடைய ஆரோக்கியமும் சீராக இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அக்டோபர் 14 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு கைமேல் பலன் கிடைக்கப்போகிறது.
விருச்சிகம்:
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மிகுந்த அற்புதமான நற்பலன்களை வழங்க இருக்கிறது. லாபஸ்தானத்தில் கேது இருப்பதினால் உங்களுக்கு வளமான வாழ்கை இருக்கும். தொழில் முன்னேற்றகம் ஏற்படும், எதிரிகள் விலகி செல்வார்கள், வீடு வாகனம் வாங்கும் யோகம் உங்களுக்கு இருக்கும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. உங்களுடைய பொருளாதரம் உச்சத்தில் இருக்கும். நீங்கள் செய்ய நினைக்கும் அனைத்து காரியங்களும் நடந்து முடியும்.
தனுசு:
நான்கில் ராகு, பத்திலே கேது இருப்பதினால் தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியில் உங்களுடைய தொழில் நன்றாக இருக்கும். இருப்பினும் ஆரோக்கிய தொல்லைகள் அடிக்கடி ஏற்படலாம். உங்கள் எண்ணங்கள் நிறைவேறுவதில் சில மாற்றங்கள் உண்டாகலாம். ஆக இந்த கால கட்டத்தில் தனுசு ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்:
மகரம் ராசிக்காரர்களுக்கு மூன்றாம் இடத்தில் ராகு இருக்கிறார் இதனால் உங்களுக்கு மிகுந்த நற்பலன்கள் கிடைக்க கூடும். உங்கள் தந்தை வழியில் உங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். அதேபோல் நண்பர்கள் வழியிலும் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு புதிய பங்குதாரர்கள் இணைந்து தொழிலை வளப்படுத்தி தருவார்கள். அணைத்து விஷயங்களிலும் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.
கும்பம்:
கும்பம் ராசிக்காரர்களுக்கு இரண்டில் ராகு ஆக உங்களுக்கு திரண்ட செல்வம் பெருகும் என்பார்கள். ஆக தொழில் வளம் சிறப்பாக இருக்கும். இருப்பினும் எட்டில் எது பகவான் இருப்பதால் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். ஆக வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து கொள்ளவும்.
மீனம்:
மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி சர்ப்ப தோஷத்தை உண்டாக்குகிறது. ஆக கனவிலும் சரி நேரிலும் சரி சர்பத்தை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். இருப்பினும் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசிய இல்லை. இதுவரை நீங்கள் இருந்த துயரங்களில் இருந்து விடுபடுவீர்கள். மேலும் வீடு மாற்றம், தொழில் மாற்றம், உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படலாம். 7-யில் கேது இருப்பதால் உங்கள் வாழ்கை துணையுடன் அனுசரித்து செல்வது மிகவும் சிறந்தது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |