ராகு கேது பெயர்ச்சி 2023 to 2024
ஆன்மீகத்தை பொறுத்தவரை நம்முடைய ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏனென்றால் நம்முடைய பிறந்த தேதி மற்றும் நேரத்தை வைத்து தான் இவை கணக்கிடப்படுவதால் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் ராகு கேது பெயர்ச்சியாக இருந்தாலும் சரி, சனி மற்றும் குரு பெயர்ச்சியாகி இருந்தாலும் சரி தாக்கம் மற்றும் வளர்ச்சி என இவ்வாறு பிரித்து தான் காணப்படுகிறது. அந்த வகையில் தற்போது 2023-ஆம் ஆண்டில் மேஷ ராசியிலிருந்து ராகு மீன ராசிக்கும் துலாம் ராசியிலிருந்து கேது கன்னி ராசிக்கும் அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி அன்று பெயர்ச்சி அடைகின்றனர். இத்தகைய பெயர்ச்சியினால் எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் வாழ்க்கையில் அமோகமான சுழலும், பொற்காலமும் உண்டாகப்போகிறது என்பதை பார்க்கலாம் வாங்க..!
ராகு கேது பெயர்ச்சி பலன்:
ராகு கேது பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் ராஜ வாழ்க்கை வாழ போகிறார்கள்..
கன்னி ராசி:
தற்போது 2-ஆம் இடத்தில் இருந்த கேது பகவானும், 8-ஆம் இடத்தில் இருந்த ராகுவும் பகவானும் மாற்றம் அடைந்து 7-ஆம் இடத்திற்கு செல்கின்றனர். இந்த பெயர்ச்சி காரணமாக கன்னி ராசிக்காரர்களுக்கு அமோகமான சூழல் ஆனது வாழ்க்கையில் ஏற்படும். மேலும் இதுநாள் வரையிலும் காணப்பட்ட கஷ்டங்கள் ஆனது விரைவில் குறைந்து காணப்படும்.
அதேபோல் பொருளாதார நிலை ஆனது சிறப்பானதாக காணப்படும்.
விருச்சிக ராசி:
விருச்சிக ராசியை பொறுத்தவரை ராகு 5-ஆம் வீட்டிலும் கேது பகவான் 11-ஆம் இடத்திற்கும் பெயர்ச்சி அடைகின்றனர். இத்தகைய பெயர்ச்சி ஆனது இவர்களது ராசிக்கு ஒரு நல்ல முடிவினை அளிக்கிறது.
அதாவது செலவுகள் அனைத்தும் குறைந்து வீடு, வாகனம் மற்றும் மனை என இவற்றை வாங்குவதற்கான ஒரு வாய்ப்பு ஆனது கிடைக்கிறது. மேலும் இதுநாள் வரையிலும் தடையில் இருந்த காரியங்கள் விரைவில் நல்ல முடிவுக்கு வரும் வாய்ப்பும் இருக்கிறது.
தீபாவளிக்கு முன் ராகு கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்
துலாம் ராசி:
துலாம் ராசியில் ராகு 6-வது இடத்திற்கும், கேது 12-வது இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்கள். இத்தகைய பெயர்ச்சி ஆனது உடல் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் ரீதியாக நல்ல மாற்றத்தை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.
மேலும் இந்த நேரத்தில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளும் வெற்றியை அளிக்கும் விதமாக முடிகிறது. முக்கிய கடன் பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் முடிவுக்கு வரும்.
சிம்மம் ராசி:
சிம்மம் போன்ற அமைப்பினை கொண்டுள்ள சிம்ம ராசியில் கேது பகவான் 8-வது வீட்டிலும் ராகு பகவான் 2-வது வீட்டிலும் பெயர்ச்சி அடைகிறார்கள். இத்தகைய பெயர்ச்சியில் ராகு பகவான் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல புகழை அளிக்கும் இருக்கிறது.
அதேபோல் பண வரவு, புதிதாக வீடு மற்றும் மனை வாங்குவது என இதுபோல எண்ணற்ற பலன்களை அளிக்கும் விதமாகவும் இருக்கிறது. மேலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வருமானமானது காணப்படும்.
அக்டோபர் 14 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு கைமேல் பலன் கிடைக்கப்போகிறது.
பித்ரு பக்ஷத்தின் கடைசி நாளில் வரும் சூரிய கிரகணத்தால் பலன்கள் அடையும் ராசிகள் …
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |