2024 ஆரம்பித்திலேயே ராகு கேதுவால் அதிர்ஷ்ட யோகத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள்..!

Advertisement

Rahu Ketu Peyarchi 2023 to 2024 Palangal in Tamil

ஒவ்வொரு நாளும் நமக்கு எப்படி அமையும் என்பதை பலரும் ஆன்மீக ரீதியாக தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். அதாவது ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு ராசி மற்றும் நட்சத்திரம் இருக்கும். இந்த இரண்டின் படி நமக்கான பலன்கள் இன்றைய நாளில் எவ்வாறு கிடைக்கும் என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். ஏனென்றால் தன் மீது உள்ள நம்பிக்கையை காட்டிலும் ஆன்மீகத்தின் மீது உள்ள நம்பிக்கை தான் பலருக்கும் அதிகமாக காணப்படுகிறது. இதோடு மட்டும் விட்டு  சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி மற்றும் ராகு கேது பெயர்ச்சி என இவற்றின் பலன்களையும் தெரிந்து கொள்வார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் ராகு கேது பெயர்ச்சியினால் 2024-ஆம் ஆண்டு அதிர்ஷ்டமான பலன்களை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2024:

2023-ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சியில் ராகு பகவான் மீனத்திலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பெயர்ச்சி அடைகிறார்கள். அந்த வகையில் இந்த பெயர்ச்சியினால் 2023 முதல் 2024 வரையில் அதிர்ஷ்டமான பலன்களை பெறப்போகும் ராசிகள் எது என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீன ராசி:

மீன ராசி

ராகு பகவான் மீன ராசியில் பெயர்ச்சி அடைந்தாலும் கூட மீன ராசியினருக்கு அமோகமான பலன்களை தான் அளிக்கிறார். அந்த வகையில் மீன ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வியாபாரம் ஆனது முன்னேற்றம் அடையும்.

விரைவில் நினைத்த மாதிரியான பலன்கள் அனைத்தும் வந்து சேரும். மேலும் பொருளாதார நிலை ஆனது முன்பை காட்டிலும் அதிகரித்து காணப்படும். அதோடு மட்டும் இல்லாமல் சிக்கல்கள் இல்லா வாழ்க்கை அமையும்.

தனுசு ராசி:

தனுசு ராசி

 

ராகு கேது பெயர்ச்சி தனுசு ராசிக்கார்களுக்கு வெற்றி அளிக்கும் விதமாக அமையும் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் 4-வது இடத்தில் ராகு பகவானும், 10-வது இடத்தில் கேது பகவானும் சஞ்சரிப்பதனால் நிதிநிலையில் சிறப்பான மாற்றம் காணப்படும்.

புதிய முயற்சிகள், புதிய வேலைவாய்ப்பு என இதுபோன்ற சுப பலன்கள் அனைத்தும் கிடைக்கும். அதோடு மட்டும் இல்லாமல் பணியிடத்தில் உங்களுக்கான சிறப்பான பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.

சனி பகவானின் மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜாக்பாட் அடிக்க போகிறது..

கும்ப ராசி:

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு இத்தகைய காலம் ஆனது அதிர்ஷ்டம் நிறைந்த ஒரு காலமாக அமைவதனால் வெற்றியும், அதிர்ஷ்டமும் வந்து சேரும். மேலும் நிதிநிலையில் எந்த சிக்கலும் காணப்படாது. ஆனாலும் கூட எந்த செயலை செய்யும் முன்பாகவும் எச்சரிக்கை மற்றும் கவனம் என இந்த இரண்டும் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் இவற்றை அறிந்து நடப்பதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

மகர ராசி:

மகர ராசி

ராகு கேது பெயர்ச்சி மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை மகிழ்ச்சியும், ஒற்றுமையும் பலன்களாக இருக்கும். அதாவது குடும்பத்தினை பொறுத்தவரை மகிழ்ச்சி ஆனது சிறப்பானதாக அமையும். அதேபோல் வீடு, வாகனம் மற்றும் மனை என இடம் என இவற்றை எல்லாம் வாங்குவதற்கான யோகமும் இருக்கிறது.

மேலும் பண வரவை பொறுத்தவரை சாதகமான பலன்கள் இல்லை என்றாலும் கூட உங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் அளவில் பலன்கள் இருக்கும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement