ராகு கேது பெயர்ச்சி 2025 | Rahu Ketu Peyarchi 2025 Date in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 2025 ஆம் ஆண்டிற்கான ராகு கேது பெயர்ச்சி எப்போது நடைபெற இருக்கிறது என்பதையும், ராகு கேது பெயர்ச்சியினால் 12 ராசிகளில் எந்த ராசி அதிக பிரச்சனையை சந்திக்க போகிறது என்பதையும் பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க. ஜோதிடத்தில், ராகுவும் கேதுவும் மாறும்போது அதை ராகு-கேது பெயர்ச்சி என்பார்கள். இவற்றின் தாக்கம் 12 ராசிகளிலும்ம் இருக்கும். ஆனால், ஒரு சில ராசிக்கு அதிக பாதிப்பையும் ஒரு சில ராசிக்கு அதிக நண்மையும் அளிக்கும்.
நிழல் கிரகம், சர்ப்ப கிரகங்கள் என அழைக்கப்படக்கூடியது ராகு மற்றும் கேது. இந்த இரண்டு கிரகங்கள் எப்போதும் பின் நோக்கி நகரக்கூடியது. இந்த கிரகம் ஒவ்வொரு ராசியிலும் 18 மாதங்கள் இருக்கு, அந்த வகையில் இந்த ஆண்டு 2025 மே மாதம் 18 ஆம் தேதி இந்த கிரகங்களின் பெயர்ச்சி நடைபெற உள்ளது. அதாவது, ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாக இருக்கிறார். இதனால் பாதிப்பை சந்திக்க போகும் அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
ராகு கேது பெயர்ச்சியினால் அதிக பிரச்சனையை சந்திக்க போகும் ராசிகள்:
சிம்ம ராசி:
ராகு கேது பெயர்ச்சி சிம்ம ராசிக்கு பலவிதமான பிரச்சனைகளை ஏற்ப்டுத்தக்கூடும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகா உள்ளார். இதனால், சிம்ம ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரக்கூடும். முக்கியமாக எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம்.
மேலும், நிதி, பொருள், நகை இதுபோன்ற இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எதிலும் கவனமக இருக்க வேண்டும். முக்கியாக பணியிடத்தில் பணி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். திருமண வாழ்க்கையில் சில சிக்கல்கள் உண்டாகலாம். உங்கள் முயற்சிகள் செயல்களில் தாமதங்கள் உண்டாகலாம்.
மேஷ ராசி:
ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்கு ஏற்றது அல்ல. இக்காலத்தில் நீங்கள் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். கவனம் சிதறினால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. ஏழரை சனி தொடங்குவதோடு, ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அனைத்திலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை சரிசெய்து விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முயற்சிகளில் தாமதங்கள் உண்டாகும்.
கும்ப ராசி:
கும்ப ராசிகாரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி கஷ்ட காலமாக இருக்கப்போகிறது. ஏற்கனவே ஏழரை சனி நடக்கக்கூடிய இந்நேரத்தில் ராகுவின் நுழைவுவதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எந்தவொரு செயலில் இறங்குவதற்கு முன்பாக ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து செய்வது நல்லது. இல்லையயன்றால் உங்களுக்கு நஷ்டம் உண்டாகலாம்.
தொழில், வியாபாரம் தொடர்பானவைகளில் வளர்ச்சி குறைந்து காணப்படும். ஒரு சிலருக்கு தோல்வியடைவும் வாய்ப்புள்ளது. மேலும், ஒரு சிலருக்கு சமுகத்தில் செலவுகளும், அவமானங்களும் சந்திக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இக்காலத்தில் நீங்கள் எதிலும் கவனமாகவும் பொறுமையாகவும் இருப்பது அவசியம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |