ராகு கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரப்போகிறது..!

Advertisement

ராகு கேது பெயர்ச்சி 2025

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் இடங்களை மாற்றுவது வழக்கமாகும். இந்த ஆண்டு சனி, குரு, ராகு, கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரேய ஆண்டில் நடைபெறுகிறது. இந்த ராகு கேது பெயர்ச்சி வருகிற மே மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. ராகு கேது என்றாலே கெடும் பலன்களை தரக்கூடிய ஒன்றாகும். ராகு கேது பெயர்ச்சி பெரும்பாலும் கெடும் பலன்களை தந்தாலும் ஒரு சில ராசிகளுக்கு நற்பலன்களையும் தருகிறது.

பெரும்பாலும் மக்கள் கிரகங்கள் பெயர்ச்சி நடந்தாளே பயப்படுகிறாரகள். கிரகங்களின் பெயர்ச்சி அனைத்து ராசியினர்களுக்கும் கெடும் பலன்களை தருவதில்லை, ஒரு சில ராசிகளுக்கு நற்பலன்களையும் தருகிறது. அப்படி இந்த ஆண்டு எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது என்று இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

சுக்கிரன் ராகு பெயர்ச்சி 2025

ராகு கேது பெயர்ச்சி 2025:

2025 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ராகு மீன ராசியில் இருந்து கும்பத்துக்கும், கேது கன்னி ராசியில் இருந்து சிம்மத்துக்கும் போகிறார். இந்த பெயர்ச்சியினால் நற்பலன்களை அனுபவிக்க போகும் ராசி கும்பம். ஏனெனில் குரு பார்வை ராகு மீது உள்ளதால் குரு சண்டாள யோகம் கும்ப ராசியினர்களுக்கு உண்டாக போகிறது.

கும்ப ராசி பலன்கள்:

கும்ப ராசிக்காரர்கள் ஜென்ம சனியில் இருந்து விடுதலை அடைகின்றனர். ஜென்ம சனி நடைபெற்ற போது கும்ப ராசிக்காரர்கள் எந்த செயலையும் முழுமையாக முடித்திருக்க இயலாது. ஏதாவது தடைகள் ஏற்பட்டு கொண்டே இருந்திருக்கும். தற்பொது ஜென்மச்சனி முடிவடைதால் உங்களுக்கு நற்பலன்கள் உங்களை தேடி வரும்.

சனி பகவான் இல்லை என்றாலும் ராகு வந்து உங்கள் ராசியில் பெயர்ச்சி அடைகிறார். ஆனால் குரு குரு பார்வை ராகு மீது உள்ளதால் குரு சண்டாள யோகம் கும்ப ராசியினர்களுக்கு உண்டாக போகிறது. நீங்கள் நிலுவையில் வைத்திருந்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களிடம் நேர்மறை எண்ணங்கள் நிறைந்து காணப்படும்.

நற்பலன்கள்:

தொழிலதிபர்கள் புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். நீங்கள் நன்கு சிந்தித்து ஆலோசனை செய்து புதிய தொழில் தொடங்கும் முடிவை எடுப்பீர்கள். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். விவகாரத்தை நோக்கி போகும் தம்பதிகளின் பிரச்சனை தீரும். மறுமணம் நாடாகும் யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

பஞ்சம ஸ்தானத்தில் இருக்கும் குரு உங்களுக்கு நிறைய நற்பலன்களை அள்ளித்தர போகிறார். இதுவரை எந்த விஷயத்தில் எல்லாம் கஷ்டத்தை அனுபவித்தீர்களோ, அதில் இருந்து மீண்டு வருவதற்கான புதியவைப்புகள் உங்களை தேடி வரும். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு கடின உழைப்பை போடுங்கள் உங்களுக்கு நிச்சயமாக நற்பலன்கள் நடக்கும்.

தொழிலில் கவனம் செலுத்த வேண்டும்:

7 ஆம் இடத்தில இருக்கும் கேதுவால் துணையிடம் சில மனவருத்தங்கள் ஏற்படும். மேலும் இரண்டாவது குழந்தையுடன் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கூட்டு தொழில் செய்யும் தொழிலதிபர்களுக்கு பார்ட்னர்களுடன் பிரச்சனை ஏற்படும். ஆனால் இது உங்களுக்கு நல்லதாக அமையும் முழு தொழிலையும் நீங்களே எடுத்து நடத்தும் வாய்ப்பு உண்டாகும். ராகுவின் அருளால் உங்களுக்கு பண வரவு இருந்துகொண்டே இருக்கும்.

வழிபட வேண்டிய தெய்வங்கள்:

நாகராஜரை வழிபாடு செய்வது உங்கள் வாழ்வில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும். பாம்பு இருக்கக்கூடிய எந்த கோவிலாக இருந்தாலும் வழிபடலாம். நல்ல மாற்றத்தை தரும். ராஜ என்கிற பெயர் கொண்டவரால் நல்ல மாற்றம் ஏற்படும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement