ராகு கேது பெயர்ச்சியால் கஷ்டத்தில் மாட்டப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானா..!

Advertisement

Rahu Ketu Peyarchi Palan 2023

பொதுவாக ஒரு ஆண் அல்லது பெண் என இருவரில் யாராக இருந்தாலும் திருமணம் செய்ய வேண்டும் என்றால் முதலில் ஜாதகப் பொருத்தம் பார்ப்பார்கள். இவ்வாறு இருக்கும் போது ராகு கேது உள்ளதா என்று பார்ப்பார்கள். ஏனென்றால் ராகு கேது ஒருவருக்கு இருந்தது என்றால் அவர்களுக்கு அதே ராகு கேது உள்ள ஜாதகத்தை தான் திருமணம் செய்வார்கள். அந்த வகையில் ராகு கேது பெயர்ச்சி ஆனது ஆன்மீகத்தில் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. மேலும் இந்த பெயர்ச்சியால் காலச்சக்கரத்தில் உள்ள 12 ராசியினருக்கும் ஒவ்வொரு மாதிரியான பலன்கள் ஆனது கிடைக்கும். இவ்வாறு இருக்கையில் ராகு கேது பெயர்ச்சியால் 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு கஷ்டகாலம் என்று பார்க்கலாம் வாங்க..!

ராகு கேது பெயர்ச்சி 2023:

வருகின்ற அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி அன்று ராகு கேது பெயர்ச்சி ஆனது நடக்கிறது. இத்தகைய பெயர்ச்சியில் கேது பகவான் கன்னி ராசிக்கும், கேது பகவான் மீன ராசிக்கும் செல்கிறார்கள். ஆகவே இத்தகைய பெயர்ச்சியால் யாருக்கு அதிர்ஷ்டம் மற்றும் கஷ்டகாலம் என இரண்டும் கலந்த பலன்கள் கிடைக்கும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷ ராசி:

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் உண்டாகும் பலன்கள் ஆனது சற்று சுமாராக தான் இருக்கிறது. அதனால் எந்த செயலை செய்தாலும் நன்றாக ஆலோசித்து செய்ய வேண்டும். மேலும் தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல் தொழில் மற்றும் வியாபாரத்தை பொறுத்தவரை நீங்கள் நல்ல லாபம் மற்றும் வருமானம் என இரண்டையும் பெற வேண்டும் என்றால் விடா முயற்சியை மேற்கொள்வது நல்லது.

துலாம் ராசி:

துலாம் ராசி

ராகு கேது பெயர்ச்சியினால் துலாம் ராசிக்காரர்களுக்கு ஆரம்ப நிலையில் நல்ல பலன்கள் இருந்தாலும் கூட அதன் பின்பு சற்று சீரான பலன்களே கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக பொருளாதார நிலை ஆனது மிகவும் குறைவாக காணப்படும். மேலும் இதுநாள் வரையிலும் தடைபட்ட விஷயங்கள் ஆனது நல்ல நிலைக்கு வருவதற்கான வாய்ப்புகள் மட்டுமே இருக்கிறது.

ஆகவே உங்களின் நிலையை பொறுத்தவரை நீங்கள் செய்யும் செயல் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு கவனமும், சிந்தனையும் அவசியம்.

ரிஷப ராசி:

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டமும், கஷ்டகாலமும் கலந்த பலனே கிடைக்கிறது. அந்த வகையில் பார்த்தால் செய்யும் செயல் மற்றும் செய்ய நினைக்கும் செயல் என இவை இரண்டும் அதிகமாக தடைபடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஆகையால் தடைகளை கண்டு அஞ்சாமல் கவனமாகவும், திட்டமிட்டும் செய்ய வேண்டும்.

மேலும் குடும்பத்தை பொறுத்தவரை மகிழ்ச்சியும், மரியாதையும் மிகவும் நிறைவாகவே காணப்படும்.

தீபாவளிக்கு முன் ராகு கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement