ராகு கேது பெயர்ச்சி விருச்சகம் ராசிக்கு எப்படி இருக்கும்? – Rahu Ketu Peyarchi Plan viruchigam
அனைவருக்கும் வணக்கம்.. ராகு மீன ராசிக்கும், கேதுகன்னி ராசியிலும் அக்டோபர் 30 தேதி பெயர்ச்சி ஆகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சி விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை நாம் இப்பொழுது படித்தறியலாம் வாங்க.
விருச்சிகம் ராசி ராகு கேது பெயர்ச்சி:
சர்ப கிரகம், நிழல் கிரகம் என்று சொல்லக்கூடிய ராகு கேது என்று அழைக்கப்படக்கூடிய ராகு மற்றும் கேது கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்றரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்ய இருக்காங்க. ஆக விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இது சிறந்த காலமாக இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டின் செல்வநிலை மேம்பட கல் உப்பு போதுங்க. இந்த பரிகாரத்தை ஒரு செய்து வாழ்நாள் பலன் பெறுங்கள்.
விருச்சிகம் ராசிக்காரர்கள் இனி நன்றாக இருப்பீர்கள், ராகு உங்கள் ராசியில் 5-ஆம் இடத்திலும், கேது உங்கள் ராசியில் இரண்டாம் இடத்திலும் பெயர்ச்சி ஆகிறார். ஆக ஐந்தாம் இடம் என்பது புத்திரஸ் தானம் மற்றும் அதிர்ஷ்டத்தை பற்றி பேசக்கூடியது.
ஆக உங்களுடைய பணம் பெருகும், வருமானத்தை கொடுப்பார் ஆக நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்கலாம், இல்லை நீங்கள் சொந்தமாக தொழில் செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்றால் இரண்டு மடங்கு லாபம் பெருகும்.
வீடு, வாகனம் அமையாதவர்களுக்கு இப்பொழுது வீடு, வாகனம் வாங்க கூடிய வாய்ப்புகள் அதிகம். பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள், ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும், கணவன் மனைவி உறவுக்குள் ஒற்றுமையும், அன்பும் பெருகும், மற்றவர்களிடம் வாங்கிய கடன்களை இப்பொழுது திரும்ப கொடுத்துவிடுவீர்கள், திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமைத்து அமோகமாக திருமணம் நடந்து முடியும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்.
வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும், வெளி நாடுகளுக்கு சென்று வேலை சேர வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு அவர்களுடைய ஆசை நிறைவேறும், மேலும் உங்களுக்கு இது வரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும், இந்த கால கட்டத்தில் உங்கள் வாழ்க்கையை மிக மகிழ்ச்சியாக வாழ்வீர்கள், மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சிறந்த நற்பலன்களை வழங்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பண வரவை பலமடங்கு அள்ளித்தரும் பச்சை கற்பூரம்.. எப்படி பயன்படுத்தனும் தெரியுமா..?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |