ராகு கேது பெயர்ச்சியினால் இவர்களுக்குகெல்லாம் கஷ்ட காலம்..

Advertisement

ராகு கேது பெயர்ச்சி 2023

ஜோதிடத்தில் ராகு கேது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஒருவருக்கு நடக்க கூடிய அதிர்ஷ்டம் மற்றும் பணவரவு மட்டுமில்லை, நஷ்டம், தீமைகளும் ராகுவினால் ஏற்படும். உங்களின் கட்டத்தில் ராகு கேது சரியாக இருந்தால் மட்டுமே செல்வம் செழிப்போடு இருக்கலாம். இல்லையென்றால் நஷ்டம், பண இழப்பு போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் இந்த வருடம் ராகு கேது பெயர்ச்சியினால் யாரெல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

ராகு கேது பெயர்ச்சி எப்போது.?

அக்டொபர் 30-ம் தேதி ராகு கேது பெயர்ச்சியடைகிறார். இந்த பெயர்ச்சியின் காரணமாக ராகு, குரு பகவானின் ராசியான மீன ராசியிலும், புதன் அதிபதியாக கொண்ட கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்க உள்ளனர்.

ராகு கேது பெயர்ச்சியினால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்:

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023

மே 30-ம் தேதி கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்களுக்கு பண பிரச்சனை வர போகிறது…

மீனம்:

மீனம்

இந்த ஆண்டு ராகு கேது பெயர்ச்சியால் ஆரோக்கியத்தில் பிரச்சனை, குடும்பத்தில் பிரச்சனை என்று தொடர்ந்து பிரச்சனையாகவே இருக்கும். இதனால் மனதளவில் பெரிதாக பாதிக்கப்படுவீர்கள். பணியிடத்தில் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரம் செய்பவர்கள் சில கஷ்டங்களை சந்திக்க நேரிடும். நீங்கள் மற்றவரிடம் கடன் வாங்கியிருந்தால் அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் கடனை சரியாக திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். இதனால் பிரச்சனை ஏற்படலாம். 

கன்னி:

கன்னி

ராகு கேது பெயர்ச்சியினால் கன்னி ராசிக்காரர்களுக்கு பல கஷ்டங்களை ஏற்படுத்தும். நீங்கள் வெளியிடத்தில் தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி, வியாபாரம் செய்பவர்களாக இருந்தாலும் சரி சிக்கல் ஏற்படும் அதனால் சூதானமாக கையாள வேண்டும். நெருங்கிய உறவுகளிடம் பிரச்சனை ஏற்பட்டு பிரிவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

ரிஷபம்:

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியினால் செய்யும் செயல்களில் தடங்கல் ஏற்படும். நீங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசும் போது பொறுமையாக பேச வேண்டும். முடிந்தவரை உங்களின் கோபத்தை வீட்டில் உள்ளவர்களிடம் காண்பிக்காமல் மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் செயல்களை பல முறை யோசித்தி விட்டு அதனை செயல்படுத்துவது நல்லது.

மேஷம்:

மேஷம்

ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நிதிநிலையில் சிக்கல் ஏற்படும். இதனால் கஸ்டப்படுவீர்கள். பல் விதங்களில் பிரச்சனை ஏற்படும் அதனால் சமாளிப்பதற்கு மனதை தைரியமாக வைத்து கொள்ளவும். உங்களின் துணையுடன் நல்லுறவு நீடிக்க பேசும் போது பொறுமையாக பேச வேண்டும். நீங்கள் இந்த நேரத்தில் உங்களின் பேசும் வார்த்தைகளை நிதானமாக பேசுவது நல்லது.

செவ்வாய், சுக்கிரன் மிதுனத்தில் இணைவதால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது அள்ளிக்கொள்ள தயாராகுங்கள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement