18 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் ராகு புதன் சேர்க்கையால் இந்த ராசிக்காரவங்களுக்கு லட்சுமி மலை பொழிய போகிறது..!

Advertisement

Rahu Mercury Conjunction Look To These Zodiac Signs In Tamil

கிரகங்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வேறு இடத்திற்கு மாறும் அப்படி மாறும் பொழுது அனைத்து ராசிக்காரர்களும் பாதிக்கப்படுவார்கள் என்றாலும் ஒரு சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். தற்போது மீன ராசியில் ராகுவும் புதனும் சேர்ந்துள்ளார்கள் இதனால் லஷ்மி மலையை பெற போகும் ராசிக்காரர்கள் யார் என்று தெரியுமா?

ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை பயணிப்பார். இப்பொழுது மீன ராசியில் ராகு மற்றும் புதன் 18 ஆண்டுகளுக்கு பிறகு சேர்ந்து இருக்கிறார்கள். இது ஒரு அறிய நிகழ்வாகும். ராகு மற்றும் புதன் மீன ராசியில் சேர்வதனால் அனைத்து ராசிக்காரர்களும் இதற்கான பலன்களை அனுபவிப்பார்கள். ஆனால் ஒரு சில ராசிக்காரர்கள் மட்டும் லட்சுமி யோகத்தை பெற இருக்கிறார்கள். எந்தெந்த ராசிகள் என்பதை இன்றைய பதிவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

சுக்கிரன் ராகு பெயர்ச்சி 2025

ராகு புதன் சேர்க்கை:

நவகிரகங்களில் அசப கிரகமாக விளங்கக்கூடியவர் ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் தற்போது மீன ராசியில் இருக்கிறார். இந்நிலையில் நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, நரம்பு, படிப்பு, வியாபாரம் போன்றவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். தற்போது புதன் பகவான் மீன ராசியில் ராகுவுடன் சேர்கிறார்.

லட்சுமி வரவு பெற போகும் 3 ராசிகள்:

ரிஷப ராசி:

ரிஷப ராசிக்காரர்களுக்கு 11 வது வீட்டில் ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் உங்களுக்கு வருமானத்தில் உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய லாபங்களை ஈட்டுவீர்கள். தொழிலதிபர்கள் முன்னேற்ற நிலைக்கு செல்வீர்கள். ஏற்கனவே செய்திருந்த முதலீடுகளில் இருந்து நற்பலன்கள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அதிக பணத்தை சம்பாதிக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்படும்.

மகர ராசி:

மகர ராசிக்காரர்களுக்கு 3 வது வீட்டில் ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் உங்களுக்கு நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். தொழில் அதிபர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க கூடும். மேலும் தொழில் சம்மந்தமான பயணங்கள் மேற்கொள்வேர்கள். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். உங்கள் வாழ்வில் நிறைய மாற்றங்கள் நிகழும்.

துலாம் ராசி:

துலாம் ராசிக்காரர்களுக்கு 6 வது வீட்டில் ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சொத்து சம்மந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் தீரும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழில் அதிபர்கள் உங்கள் தொழில் முன்னேற்றம் அடைவீர்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement