ராகு கிரகம் ராசியை மாற்றுவதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம்..

Advertisement

Rahu Peyarchi 2023 Meenam

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் தங்களின் ராசிகளை குறிப்பிட்ட காலத்திற்கு மாற்றி கொண்டே இருப்பார்கள். அப்படி மற்றும் போது எல்லா ராசிகளுக்கும் அதனுடைய பலன்கள் காணப்பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டும் அதனுடைய பலன் அதிகமாக இருக்கும். ராகு கிரகம் அக்டோபர் 30 அன்று தனது ராசியை மாற்றப் போகிறது. அதாவது ராகு கிரகம் மேஷ ராசியை விட்டு மீன ராசியில்  சஞ்சரிக்க போகிறார். இதனால் குரு சண்டாள யோகம் நீங்கப் போகிறது. அப்படிப்பட்ட நிலையில், இந்த யோகம் முடிவடைந்தால், இந்த 3 ராசியினரின் ஒவ்வொரு விருப்பமும் நிறைவேறும். எதிர்பாராத நிதி ஆதாயமும் கிடைக்கும். அந்த ராசியினர் யார் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

ராகு கிரகம் மீன் ராசிக்கு மாறுவதால் எந்தெந்த ராசிக்கு நன்மைகள்:

சிம்மம்:

சிம்மம் ராசி

குரு மற்றும் ராகுவின் சேர்க்கை முடிவதால் நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் ஆளு வெற்றி அடைவீர்கள். மேலும் நீங்கள் மாணவர்களாக இருந்தால் இந்த நேரம் உங்ககளுக்கு உகந்ததாக இருக்கும்.

தொழில் செய்பவர்களுக்கு இந்த காலம் உங்களுக்கு உகந்ததாக இருக்கும். மேலும் வியாபாரம் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களின் எல்லா செயல்களுக்கும் தந்தை பக்க பலமாக இருப்பார்கள்.

சனி பெயர்ச்சியின் நேரடி சஞ்சாரம்: தீபாவளிக்கு முன் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் 

கடகம்:

கடகம்

 

 

கடக ராசிகாரர்களுக்கு இந்த காலம் நல்ல காலமாக இருக்கின்றது. இதுவரை தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏதும் பிரச்சனை இருந்தால் அவை நீங்கி விடும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அதே சமயத்தில் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

அலுவலங்களில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். உங்களின் முன்னோர்களின் சொத்துக்களால் நன்மையை அடைவீர்கள்.

துலாம்:

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் வெற்றியை அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் செயலுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும். அதனால் உங்களின் துணையுடன் விட்டு  செல்வது நல்லது. பணியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதிநிலைமை சிறப்பாக காணப்படும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement