ராகு பெயர்ச்சி பலன்கள்
பொதுவாக நாம் அனைவரும் ஆன்மீகத்தில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய 2 முக்கிய பெயர்ச்சிகள் உள்ளது. அதில் ஒன்று சனி பெயர்ச்சி மற்றொன்று ராகு பெயர்ச்சி. அந்த வகையில் இந்த வருடத்திற்கான ராகு பெயர்ச்சி ஆனது அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி அன்று நிகழவிருக்கிறது. அந்த வகையில் ராகு என்றாலே அச்சம் கொள்ளும் நாம் இத்தகைய பெயர்ச்சிக்கான பலன்களை எப்படி பெறப்போகிறோம் என்பது ஜோதிட பலன்களின் படி ஒரு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டும் இல்லாமல் சிலரது ஜாதகத்தில் ராகு தோஷம் என்று சொல்லப்படும் தோஷம் ஆனது காணப்படுகிறது. இத்தகைய தோஷம் ஆனது வாழ்க்கையில் நிறைய இன்னல்களை சந்திக்க செய்கிறது. ஆனால் 2023-ஆம் ஆண்டிற்கான ராகு பெயர்ச்சி ஆனது சில ராசிக்காரர்களை மட்டும் அவருடைய ராசி மற்றும் நட்சத்திரம் அடிப்படையில் அமோகமான பலன்களை தரும் வகையில் இருக்கிறது. எந்த ராசிக்கு எந்த மாதிரியான பலன்களை தருகிறது என்று பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறலாம் வாருங்கள்.
சனியில் உருவாகும்.. இந்த யோகம்.. யாருக்கு நல்ல மாற்றம்.. யாருக்கு அதிர்ஷ்டம்.. |
Rahu Peyarchi 2023:
இந்த வருடத்திற்கான ராகு பெயர்ச்சி ஆனது அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி அன்று ராசியில் முதல் ராசியான மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளது. இத்தகைய பெயர்ச்சி காரணமாக மூன்று ராசிகளுக்கு வாழ்க்கையில் அனைத்து விதமான அதிர்ஷ்டங்களையும் அளிக்கிறது.
மீனம் ராசி:
ராசியில் கடைசி ராசியான மீன ராசிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்தாலும் கூட மீன ராசிக்கு அமோகமான பலன்களை அளிக்க உள்ளார். இத்தகைய பலன் ஆனது இதுநாள் வரையிலும் இருந்த பண பிரச்சனையில் இருந்து விடுபட செய்கிறது.
மேலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத வெற்றியினை அளிக்கும் வகையில் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் கடன் பிரச்சனை படிப்படியாக குறையும் என்றும் ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
கடகம் ராசி:
12 ராசிகளில் 4-வதாக இருப்பது கடக ராசி தான். கடக ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி ஆனது அதிர்ஷ்டகரமான பலன்களை அளிக்கிறது. அதாவது வாகனம் மற்றும் புதிய வீடு போன்றவற்றை வாங்குதல், வியாபாரத்தில் நல்ல லாபம் போன்ற அனைத்தும் கிடைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டாகும். ஆனால் எந்த செயலிலும் பொறுமை என்பது மிகவும் அவசியம் என்றும் ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.
மேஷம் ராசி:
மேஷ ராசிக்கார்களுக்கு இதுநாள் வரையிலும் இருந்து கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி சமூகத்தில் நல்ல புகழ் மற்றும் பெருமை உண்டாகும் நேரமாக இருக்கப்போகிறது. இனி வரும் காலங்களில் பண பிரச்சனை என்பது இல்லாமல் வெற்றிகரமான வாழ்க்கையாக இருக்கும்.
மேலும் ஏற்கனவே பார்த்து கொண்டிருக்கும் வேலை அல்லது தொழில் இப்போது தான் லாபத்தை தரும் காலமாக இருக்கப்போகிறது. ராகு மேஷ ராசியில் இருந்து விலகி மீன ராசிக்கு சென்றாலும் கூட நல்ல பலனை தான் அளிக்கிறார் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
மே 30-ம் தேதி கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்களுக்கு பண பிரச்சனை வர போகிறது…
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |