Rahu Peyarchi Palangal
பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் படி ராகு மற்றும் கேது பாவ கிரகங்களாக கருதப்படுகின்றன. இந்த இரண்டு கிரகங்களும் எப்பொழுதும் வக்ர நிலையில் தான் பெயர்ச்சி ஆகின்றன. அதேபோல் தற்போது ராகு மேஷ ராசியிலும், கேது துலாம் ராசியிலும் அமர்ந்துள்ளார். அக்டோபர் 30 அன்று ராகு மேஷ ராசியிலிருந்து விலகி மீன ராசியில் நுழைகிறார். இந்த பெயர்ச்சியின் பலன்கள் பன்னிரெண்டு ராசிகாரர்களுக்கும் கிடைக்கும். அதாவது ஒரு சிலருக்கு இந்த பெயர்ச்சி ஒரு சில ராசிகாரர்களுக்கு அதிக அளவு தீமைகளை அளிக்கும். ஆனால் ஒரு சில ராசிகாரர்களுக்கு அதிக அளவு நன்மைகளை அள்ளி தரும். அப்படி இந்த பெயர்ச்சியால் மகிழ்ச்சி மழையில் திளைக்க போகும் ரசிகர்கள் யாவர் அவர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்க போகின்றது என்பதை எல்லாம் பற்றி இன்றைய பதிவில் விரிவாக காணலாம் வாங்க..
தப்பி தவறியும் இந்த செடியை மட்டும் வீட்டில் வைத்துவிடாதீர்கள்.. பண கஷ்டம் அதிகரிக்கும்
ராகு பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் முழுதாக நினைய போகும் 3 ராசிக்காரர்கள்:
அக்டோபர் 30 அன்று ராகு மேஷ ராசியிலிருந்து விலகி மீன ராசியில் நுழைகிறார். இந்த பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் நினைய போகும் 3 ராசிக்காரர்கள் யார் யார் அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை எல்லாம் பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
ரிஷப ராசி:
இந்த ராகு பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிக மிக சாதகமான பலன்களை அளிக்கும். ஏனென்றால் ராகு கிரகம் உங்களாது ஜாதகத்தின் வருமான வீட்டில் சஞ்சரிக்கும். எனவே, இந்த நேரத்தில் உங்கள் வருமானத்தில் மிகப் பெரிய அதிகரிப்பு இருக்கலாம்.
புதிய வருமான ஆதாரங்களையும் உருவாக்க முடியும். மேலும் இந்த காலம் உங்களுக்கு நிதி ரீதியாக பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் சம்பளம் பெறுபவர்கள் பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் இடமாற்றத்திற்கான வாய்ப்புகளையும் பெறலாம்.
உப்புடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து வையுங்க போதும் கோடி கடனும் தீர்ந்து போகும்
கடக ராசி:
கடக ராசிக்காரர்களுக்கு ராகு கிரகத்தின் ராசி மாற்றம் பல பல நன்மைகளை அளிக்கும். ஏனெனில் ராகு கிரகம் உங்கள் ராசியிலிருந்து ஒன்பதாம் இடத்திற்கு மாறப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
நீங்கள் வகுக்கும் திட்டங்கள் அனைத்தும் நன்மையில் சென்று முடியும். வேலையில் வெற்றி வாய்ப்பு உண்டு. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இது சாதகமான காலகட்டம், வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
இந்த பெயர்ச்சி காலத்தில் புதிய வருமான ஆதாரங்களையும் பெறலாம். இது நிதி சிக்கல்களை தீர்க்கும்.
50 ஆண்டுகளுக்கு பிறகு அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகம் இனிமேல் இந்த 3 ராசிக்காரர்கள் தான் ராஜா
கும்ப ராசி:
ராகு கிரகமானது மீனத்தில் நுழைவது கும்ப ராசி மக்களுக்கு பற்பல அதிர்ஷ்டமான பலன்களை தரும். ஏனெனில் ராகு தேவன் உங்கள் ராசியின் செல்வ ஸ்தானத்திற்கு மாறுவார்.
எனவே, இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறலாம். உங்கள் ராசியின் அதிபதி சனிபகவான் ராகுவுடன் நட்புடன் இருக்கிறார். எனவே இந்த காலகட்டமானது முதலீடு செய்வதற்கு மிகவும் நல்ல நேரம்.
இந்த நேரத்தில், உங்கள் பேச்சுத் திறன் மேம்படும், இதன் காரணமாக பலர் உங்கள் பேச்சால் கவரப்பட்டு உங்களுடன் இணைவார்கள். இதனால் உங்களின் பொருளாதார நிலை உயரும்.
வீட்டில் பணம் மலையாக குவிய 1 ரூபாய் நாணயத்தை இந்த இடத்தில் வையுங்க போதும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |