Rain on a Wedding day is Good luck or Bad luck
திருமணத்தின் போது மழை பெய்தால். நிறைய அரிசியை ஊறவைத்து சர்க்கரை போட்டு சாப்பிட்டு இருப்ப என்று அந்த திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் மணமக்களின் காதில் சொல்லிவிட்டு செல்வார்கள். ஐந்து அறிவு உள்ள ஜீவன்கள், தாவரங்கள் போன்ற இயற்கையின் அங்கமாக திகழும் ஜீவன்களின் அசைவை வைத்து, நல்லது கெட்டதை கணிப்பதே சகுனம் பார்ப்பதாகும்.
மகிழ்ச்சியாக நடைபெறும் திருமண விழாவில் திடீர் என்று மழை பெய்தால் அது நல்ல சகுனமா? அல்லது கெட்ட சகுனமா என்று பலரது மனதில் பல குழப்பங்கள் இருக்கும். ஒரு சிலருக்கு திருமணத்தின் போது மழை பெய்தால் மகிழ்ச்சியாக இருக்கும், அதுவே ஒரு சிலருக்கு திருமணம் நடைபெறும் போது மழை பெய்தால் பிடிக்காது, ஐயோ இப்போது மழை பெய்ய வேண்டும் என்று மழையை திட்டிக்கொண்டு இருப்பார்கள். ஒவ்வொரு நல்ல செயல்களை செய்யும் போது நாம் சகுனம் பார்க்கின்றோம், அதே போல் திருமணம் நடைபெறும் போது அதிக அளவில் சகுனம் பார்க்கின்றோம். ஆக திருமணம் நடக்கும் போது மழை பெய்வது என்பது நல்ல சகுனமா அல்லது கெட்ட சகுனமா என்று இப்பொழுது நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
திருமணம் அன்று மழை பெய்வது நல்ல சகுனமா அல்லது கெட்ட சகுனமா?
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நமது பெரியவர்கள் சொல்வார்கள், அத்தகைய திருமணமானது அன்றைய காலத்தில் பிரம்ம முகூர்த்தமான காலை நேரத்தில் மட்டுமே நடத்தப்பட்டது. ஆனால் இப்போது உள்ள நவீன காலத்தில் இரவு நேரங்களில் கூட திருமணம் நடத்துகின்றன.
மழை பெய்வது என்பது ஒரு இயற்கையான நிகழ்வு தான். மழை பொலிவானது நமது அனைவருடைய மனதிலும் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வை கொடுக்கும். அந்த மழையானது வறண்ட நிலத்தில் உள்ள பயிர்களை உயிர்பிக்குது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
12 ராசிகளுக்கு உரிய தமிழ் மற்றும் ஆங்கில லக்கி எழுத்துக்கள்
அந்தவகையில் வைத்து பார்க்கும் போது திருமணம் நாள் அன்று மழை பெய்வது அந்த மணமக்களின் சொல்லப்படுகிறது. மழையானது ஆசீர்வாதம், தூய்மை, ஒற்றுமை மற்றும் வலிமை ஆகியவற்றை குறிக்கிறது. எனவே நமது வாழ்க்கையின் முக்கிய நாட்களில் மழை பெய்தால் நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது.
மழை என்பது ஆசீர்வாதத்தை சொல்கிறது, எனவே திருமணம் நாள் அன்று மழை பெய்தால் அந்த மணமக்கள் வர்ணபகவானால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். மழை பெய்ததும் நமக்கு தேவையான நீர் மற்றும் வளம் கிடைக்கும். அது பொல் திருமணம் நடக்கும் போதும் மழை பெய்தால் அந்த மணமக்கள் ஒற்றுமையாகவும், அவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான நிறைந்த செல்வதையும் பெற்று, நல்ல வளமுடன் வாழ்க்கையை தொடங்குவார்கள்.
மழை பெய்து முடிந்தது ஒரு புதிய ஆரம்பத்திற்கான வழி கிடைத்துவிட்டது என்று அர்த்தம் ஆகும். எனவே திருமண நாளில் மழை பெய்வதால், திருமணம் நடந்து முடிந்த புதிய தம்பதிகள், தங்களுடைய புதிய வாழ்க்கையில் தெளிவான மனநிலைமையோடு இருப்பார்கள்.
திருமணம் என்பது குழந்தை செல்வதை கொடுக்கும், பல கலாச்சாரத்தின் படி திருமணத்தின் அன்று மழை பெய்தால் அந்த தம்பதியர்களுக்கு பல குழந்தைகள் பிறக்கும் என்ற வரத்தை வழங்கும் ஒரு நல்ல சகுனம் ஆகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எந்த வேண்டுதலுக்கு எத்தனை சிதறு தேங்காய் உடைக்க வேண்டும் தெரியுமா.?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |