சந்திர கிரகணத்துக்கு பிறகு சூரியன், ராகு, கேது பெயர்ச்சியால் ராஜ யோகம் கிடைக்கும் ராசிகள்

Advertisement

சந்திர கிரகணத்தால் பலமை அடையும் ராசிகள்

பொதுவாக ஜோதிடத்தில் கிரங்கங்கள் அனைத்தும் தங்களின் ராசியை மாற்றி கொண்டே இருக்கும். இந்த ராசியை மாற்றுவதால் நன்மைகளும் இருக்கும், தீமைகளும் இருக்கும். அந்த வகையில் நேற்றைய தினம் 25.03.2024 அன்று சந்திர கிரகணம் நிகழ்ந்துள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் தோஷங்கள் உடைய கிரகங்களான சூரியன், ராகு, கேது போன்றவை இருக்கிறது, இந்த மூன்றும் கிரகங்களும் சந்திர கிரகணத்தால் பலம் அடைகிறது. இதனால் எல்லா ராசிகளுக்கும் நன்மையை கொடுத்தாலும் சில ராசிகள் மட்டும் அதீத நன்மையை அடைய போகிறார்கள். அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

raja yoga zodiac signs after lunar eclipse in tamil:

ரிஷபம் மிதுனம் துலாம்
தனுசு ராசி மகர ராசி கும்ப ராசி

கும்பம்:

கும்பம்

கும்ப ராசியில் சூரியன் மற்றும் ராகு பெயர்ச்சி அடைவதால் சிறப்பானதாக இருக்கபோகிறது. உங்கள் வாழ்க்கையில் இதுவரை இருந்த பணவரவை விட அதிகமாக இருக்கும். அது போல நீங்கள் புதிய வேலை தொடங்கினாலும் சரி அல்லது ஏற்கனவே வேலை பார்த்து கொண்டிருந்தாலும் சரி அந்த வேலையில் லாபம் கிடைக்கும். இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு ஏதும் சொத்து பிரச்சனை இருந்தால் அவை நீங்கும். உங்களின் துணைக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள்.

மகரம்:

 

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு தோஷ கிரகங்களின் பெயர்ச்சியானது அனைத்து விதத்திலும் நன்மையை தர கூடியது. இதனால் உங்களுக்கு இதுவரை இருந்த வருமானத்தை விட அதிகமாக காணப்படும். இதனால் எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தை சேமிப்பீர்கள். வெளி வட்டாரங்களில் உங்களின் மதிப்பானது அதிகரிக்கும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு ஆசைப்பட்ட வேலை கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனை நீங்கி சுகமாக இருப்பீர்கள்.

தனுசு:

தனுசு

தனுசு ராசியில் மூன்றாம் வீட்டில் செவ்வாயும், நான்காம் வீட்டில் சூரியன் மற்றும் ராகு பெயர்ச்சி அடைவதால் நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். புதிதாக சொத்து அல்லது மனை வாங்குவீர்கள். சுருக்கமாக சொன்னால் பண விஷயத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். அதுவே சொந்தமாக தொழில் செய்பவராக இருந்தால் உங்களிடம் லாபம் அதிகரிக்கும்.

100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சந்திர கிரகணம்..! இனி இந்த ராசிகளை கையிலே பிடிக்க முடியாது..!

துலாம்:

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு தோஷ கிரகங்கள் பெயர்ச்சி அடைவது அதிர்ஷ்டமானதாக இருக்கிறது. உங்களுடைய வருமானம் ஆனது அதிகரிக்கும். இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆசைப்பட்டதை வாங்கி தருவீர்கள். பணியிடத்தில் வேலை செய்பவராக இருந்தால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை கிடைத்த லாபத்தை விட அதிகமாக கிடைக்கும். மேலும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.

மிதுனம்:

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு யோகம் உடையதாக இருக்கும். வெளிநாட்டில் வேலை போக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த காலம் உகந்ததாக இருக்கும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பானது அதிகரிக்கும். இதனால் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். வீட்டில் பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள்.

ரிஷபம்:

ரிஷபம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் ராகு பெயர்ச்சி சாதகமானதாக இருக்கும். பணியிடத்தில் வேலை செய்பவராக இருந்தால் அவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். பணவர்வது அதிகமாக காணப்படும். இதனால் தாராளமாக பணத்தை செலவு செய்வீர்கள், அதே சமயம் பணத்தை முதலீடும் செய்வீர்கள். வியாபாரம் செய்பர்களுக்கு எல்லா விதத்திலும் சாதகமான பலனை கொடுக்கும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

 

 

 

Advertisement