ராஜயோகம் தேடி வரும் ஜாதகம்!! Rajayogam Astrology in Tamil!!
Rajayogam Astrology in Tamil – ஆன்மிக நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய யோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்க இருக்கிறோம். குறிப்பாக சொல்ல வேண்டும் கேர்ணல் ராஜயோகம் என்றால் என்ன? அந்த ராஜயோகம் உங்களுடைய ஜாதகத்தில் இருக்கிறதா என்பதை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். ஆக பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
ராஜயோகம் எப்படி அறிவது?
ஆன்மிகத்தில் யோகம் என்றாலே 1000-ம் கணக்கான யோகங்கள் இருக்கின்றன. அதில் 1163 யோகங்கள் மட்டும் தான் நமது வாழ்க்கையில் பலிதமாகிறது. உதாரணத்திற்கு குருச்சத்திர யோகம், கெஜகேசரி யோகம், தர்மகர்மாதிபதி யோகம், நீச்சபங்க ராஜயோகம், புதையல் யோகம், கோடீஸ்வர யோகம் என்று நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அவற்றில் ராஜயோகம் என்று உள்ளது.
இந்த ராஜயோகம் என்று சொல்லப்படும் வார்த்தையை கேட்டாலோ அல்லது உச்சரித்தாலோ ஏதவாது ஒரு நன்மை நமக்கு இருந்துகொண்டு இருக்கிறது என்று சொல்லலாம்.
உதாரணத்திற்கு ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப உச்சரித்தலோ அல்லது நினைத்துக்கொண்டிருந்தாலோ அதற்கான பலன் ஓரளவாவது நமக்கு பலிதமாகும் என்பது உண்மை.
ஆக ராஜயோகத்தை எந்த கிரகம் கொடுக்கிறது என்றால், இருக்கின்ற ஒன்பது கிரகங்களில் எந்த கிரகத்தாலும் ராஜயோகத்தை கொடுக்க முடியும். இருப்பினும் ஒவ்வொரு கிரகத்தினுடைய தன்மைகளை புரிந்துகொண்டால் மட்டுமே அந்த கிரகம் கொடுக்கக்கூடிய ராஜயோகம் உண்மையா என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்..
இருப்பினும் உங்களை தெளிவுப்படுத்தும் வகையில் ராஜயோகத்தை கொடுக்கும் ஒருசில கிரகங்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஜோதிடம் பற்றி தெரிந்து கொள்வோம்
ராஜயோகம் தேடி வரும் ஜாதகம்!!
சூரிய பகவான்:
ஆதித்ய பகவான் என்று சொல்லக்கூடிய, அதிகாரத்தை அருளக்கூடிய, அரசு உத்தியோகத்திற்கு முதன்மையாக இருக்க கூடிய, அரசு சம்பந்தப்பட்ட முதன்மை பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய சூரிய பகவான் தான் அரச கிரகமாக, ஆதித்ய கிரகமாக, உங்களது அதிர்ஷ்டத்தை தெரிந்துகொள்ள கூடிய கிரகமாக ஜோதிட சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூரியபகவான் உங்களது ராசியில் லக்னத்திலோ அல்லது ஆட்சியாகவோ, அல்லது உச்சமாக இருந்தால் இந்த சூரிய பகவானின் திசா வரக்கூடிய 6 வருடங்களில் உங்களது 60 வருடத்திற்கு தேவையான மிகப்பெரிய அமைப்புகளை மிக சிறப்பாக சந்திக்கமுடியும். அல்ல அல்ல குறையாத அதிர்ஷ்டகரமான ராஜயோகத்தை அனுபவிக்க முடியும்.
சுக்கிரன்:
அடுத்த ராஜகிரகமாக சுக்கிரபாகவனை ஜோதிட சாஸ்திரத்தில் கூறுகின்றன. ஒருவருடைய ராசியில் 20 வருடம் ஆட்சி செய்யக்கூடிய சுக்கிரபாகவன், ஒருவது ராசியில் நல்ல இடத்தில் இருந்தார்கள் என்றாலோ அல்லது லக்கினத்தில் அம்சயோகம் என்ற இன்னொரு யோகமும் அந்த ஜாதகக்காரருக்கு கிடைக்கிறது. மேலும் இருந்தாலோ, அல்லது லக்கனத்தில் ஆட்சி செய்தாலோ, அல்லது உட்சத்தில் இருந்தாலோ, அல்லது பஞ்சம ஸ்தானத்தில் இருந்தால் நற்பலன்களை அந்த ஜாதகக்காரர் பெறுவார்கள்.
செவ்வாய்:
மங்கலகாரகன், பூமிகாரகன் என்று சொல்லக்கூடிய, விவேகத்தை அருளக்கூடிய, வேகமாக மற்றும் சுறு சுறுப்பாக இயங்கக்கூடிய செவ்வாய் பகவான் உங்கள் ஜாதகத்தில் மகரம் ராசியில் இருந்தால் அந்த ஜாதகத்திற்கும் ராஜயோகம் என்பது கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஜென்ம சனி என்றால் என்ன?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |