ரட்ச ரட்ச ஜகன்மாதா பாடல் வரிகள்..! | Raksha Raksha Jagan Matha Lyrics in Tamil

Advertisement

Raksha Raksha Jagan Matha Lyrics in Tamil

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கும். அப்படி கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தங்களது மதத்தின் கடவுளை மிக மிக விரும்பி வணங்குவார்கள். அதேபோல் தான் இந்து மதத்தை சேர்ந்தவர்களும் தங்களது மதத்தை சேர்ந்த கடவுள்களை மிக மிக விரும்பி வணங்குவார்கள். அப்படி இந்து மதத்தின்படி இந்த உலகினை காத்து நாம் அனைவருக்கும் தாயாக அன்பு செலுத்து ஒரு கடவுள் என்றால் அது அந்த பரமசிவனின் மனைவியான பார்வதி தேவிதான். அவரை பல பெயர்களில் நாம் வணங்குகின்றோம். இவ்வாறு நாம் மிகவும் விரும்பி வணங்கும் பார்வதி தேவியின் அருளை நாம் பெறவேண்டும் என்றால் அவருக்கு மனமார பூஜை செய்து அவருக்கான போற்றி, மந்திரம், பாடல் ஆகியவற்றை பாடி வணங்க வேண்டும். அதனால் இன்று ரட்ச ரட்ச ஜகன்மாதா பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெற்று கொள்ளுங்கள்.

துர்க்கை அம்மனின் ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் பாடல் வரிகள்

Raksha Raksha Jagan Matha Song Lyrics in Tamil

Raksha Raksha Jagan Matha Song Lyrics in Tamil

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
மங்கள வாரம் சொல்லிட வேண்டும்
மங்கள கண்டிகை ஸ்லோகம் இதை
ஒன்பது வாரம் சொல்லுவதாலே
உமையவள் திருவருள் சேரும்

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா

படைப்பவள் அவளே காப்பவள் அவளே
அழிப்பவள் அவளே சக்தி அபயம்
என்று அவளை சரண் புகுந்தாலே
அடைக்கலம் அவளே சக்தி ஜெய ஜெய
சங்கரி கௌரி மனோகரி அபயம் அளிப்பவள்
அம்பிகை பைரவி

மஹா மிருத்யுஞ்சய மந்திரம் வரிகள்

சிவ சிவ சங்கரி சக்தி மஹேஸ்வரி திருவருள் தருவாள் தேவி
திருவருள் தருவாள் தேவி

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா

கருணையில் ககை கண்ணணின் தங்கை
கடைக்கண் திறந்தால் போதும்
வருகின்ற யோகம் வளர்பிறை யாகும்
அருள்மழை பொழிவாள் நாளும்
நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள்
காளி எனத் திரிசூலம் எடுத்தவள்
பக்தருக்கெல்லாம் பாதை வகுத்தவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா….

பசுமாட்டிற்கு இந்த ஒரு பொருளை தானமாக கொடுத்தால் தீராத கடனும் தீரும்

தமிழ் கடவுளின் கந்தர் அலங்காரம் பாடல் வரிகள்

ரட்ச ரட்ச ஜகன்மாதா பாடல் வரிகள் Pdf 

 

 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

 

Advertisement