ராமரின் அருளை பெற 12 ராசிக்காரர்களும் இதை செய்தால் போதும்.!
இந்து மதத்தில் கொண்டாடப்படும் நாட்களில் ராமநவமியும் ஒன்று. ராமர் பிறந்த நாளாக இந்த சிறப்பு விழா கொண்டாடப்படுகிறது. ராம நவமியின் புனித திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சைத்ரா மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் ஒன்பதாம் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ராம பக்தர்கள் விரதம் இருந்து, ராமரை வழிபடுவார்கள். ராம நவமி நாளில் விரதமிருந்து ராமரை வழிபட்டால் ராமரின் அருள் கிடைப்பதோடு, அனுமனின் அருளும் கிட்டும். ஏனெனில் ராமரின் தீவிர பக்தன் தான் அனுமன். இப்படிப்பட்ட நன்னாளில் 12 ராசிக்காரர்களும் தங்கள் ராசிக்குரிய மந்திரங்களை 108 முறை சொல்வதன் மூலம், ராமரின் அருள் முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
அதனால் நாளைய தினம் ராமநவமி வருகின்றது. இந்த நன்னாளில் நீங்கள் விரதமிருந்து அனுமனை வழிபடுங்கள். அனுமனின் முழு அருள் கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் நம்பப்படுகிறது. சரி வாங்க பதவினுள் செல்வோம்.
Ram Navami Zodiac Sign Mantra in Tamil:

| ராசிகள் | மந்திரங்கள் |
| மேஷம் | ஓம் பரமாத்மனே நமஹ |
| ரிஷபம் | ஓம் பரஸ்மை பிரம்மனே நமஹ |
| மிதுனம் | ஓம் யஜ்வனே நமஹ |
| கடகம் | ஓம் பித்வாஸ்ஸே நமஹ |
| சிம்மம் | ஓம் ஹர்யே நமஹ |
| கன்னி | ஓம் ராம் சேதுக்ருதே நமஹ |
| துலாம் | ஓம் ராகவாய நமஹ |
| விருச்சிகம் | ஓம் ஆதிபுருஷாய நம |
| தனுசு | ஓம் பராய நமஹ |
| மகரம் | ஓம் பர்காயை நமஹ |
| கும்பம் | ஓம் மஹோதராய நமஹ |
| மீனம் | ஓம் ப்ராஹ்மணாய நமஹ |
ராம நவமி அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள்
மந்திரம் கூறும் முறை:
மேலே கூறியுள்ள மந்திரத்தை உங்களுக்கு என்ன ராசியில் என்ன மந்திரம் உள்ளதோ அதனை 108 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரிப்பதால் ராமரின் அருள் முழுமையாக கிடைக்கும். மேலும் திருமணம் தள்ளிபோனவர்களுக்கு கைக்கூடி வரும். உங்களின் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி கிடைக்கும்.
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |













