வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ராம நவமி தேதி நேரம் மற்றும் விரத முறை

Updated On: March 23, 2026 5:03 PM
Follow Us:
rama navami 2024 date in tamil
---Advertisement---
Advertisement

ராம நவமி தேதி நேரம்

ராமர் பிறந்த நாளாக இந்த சிறப்பு விழா கொண்டாடப்படுகிறது. ராம நவமியின் புனித திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சைத்ரா மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் ஒன்பதாம் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையானது இந்து மதத்தில் கொண்டாடப்படும் நாட்களில் ராமநவமியும் ஒன்று. இந்த ஆண்டு எப்போது வருகிறது, எப்படி வழிபட வேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

ராம நவமி தேதி நேரம்:

பஞ்சாங்கத்தின் அடிப்படையில், பங்குனி மாதம் அமாவாசை முடிந்து, வளர்பிறை நவமி திதி  மார்ச் 26 ஆம் தேதி  பகல் 02.57 மணிக்குத் தொடங்கி, நவமி திதி மார்ச் 27 பகல் 12.53 மணிக்கு நிறைவடைகிறது.

உதயதிதியின் அடிப்படையில், ராம நவமி விழா மார்ச் 27, 2026 அன்று வருகின்றது. இந்த நாளன்று  காலை 11.13 AM முதல் மதியம் 01.41 PM மணி வரை ஸ்ரீ ராமரை வழிபடுவதற்கான உகந்த நேரம் ஆகும். காலை 9.30  AM மணிக்குள் அல்லது 10;30 AM மணிக்கு ராம நவமி பூஜை  செய்யலாம்.

ராமநவமி வழிபாடு:

ராம நவமி தேதி நேரம்

ராம நவமி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு பூஜை அறையை சுத்தம் செய்து ஸ்ரீ ராமர், சீதா தேவி, லட்சுமணன் மற்றும் அனுமன் போன்ற படங்களுக்கு மாலை அணிவித்து மஞ்சள் குங்குமம் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

அன்றைய நாள் துளசி இலைகளை மாலையாக கட்டி அனுமனுக்கு அணிவிக்க வேண்டும்.  அன்று விரதம் இருப்பவர்கள் நீர்மோர், பானகம் மற்றும் ஊறவைத்த பாசிப்பருப்பு போன்றவை நெய் வேத்தியமாக வைக்கப்பட்டு விரதம் இருப்பவர்கள் இந்த பிரசாதத்தை சாப்பிடலாம்.

ராம நவமி அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள்

ராமநவமி விரதம் முறை:

ராமநவமி அன்று காலையில் எழுந்து குளித்து விட்டு வீட்டை தூய்மைப்படுத்தி விட்டு ராமர் படத்திற்கு மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் உணவு சாப்பிடாமல் விரதம் இருப்பவர்கள் ராமரை பற்றிய நூல்களை படித்தும், அவரது துதியை சொல்லி கொண்டு இருக்கலாம்.

ராமநவமி விரதம் பலன்கள்:

அன்றைய நாள் விரதம் இருப்பவர்களுக்கு அனுமனின் முழு அருள் கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறி வருவார்கள். வியாதிகள் நீங்கும். உங்களின் பொருட்கள் ஏதும் தொலைந்து போகிருந்தால் அவை கிடைக்கும். வறுமை நீங்கி செல்வ செழிப்போடு வாழ்வீர்கள். ஆரோக்கியத்தில் ஏதும் பிரச்சனை இருந்தால் அவை நீங்கும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now