ராம நவமி அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள்..!

Advertisement

Rama Navami Mantra in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ராம நவமி அன்று சொல்லவேண்டிய (Rama Navami Mantra) சக்தி வாய்ந்த மந்திரங்கள் பற்றி இப்பதிவில் விவரித்துள்ளோம். நாமம் ஒலிக்கும் எல்லாம் இடங்களிலும் ஸ்ரீ ராமரின் அருளும், ஆஞ்சநேயரின் அருளும் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். ஆஞ்சநேயர் அவர்கள், ராம நாமம் ஒலிக்கும் இடத்தில் தான் நானும் இருப்பேன் என்று கூறி, கிடைப்பதற்கு அரிய வைகுண்ட பதவியையும் வேண்டாம் என்று கூறினார்.  இதிலிருந்தே ராம நாமத்தின் மகிமையை தெரிந்துகொள்ளலாம்.

எனவே, ராம நவமி அன்று இந்த சக்தி வாய்ந்த மந்திரங்களை சொல்வதன் மூலம் நற்பலன்களை பெறலாம். ராம நவமி அன்று ராம மந்திரங்களை சொல்லி வழிபட்டால் செல்வ வளம் பெருகும், குடும்ப ஒற்றுமை சிறக்கும், வெற்றிகள் சேரும், கஷ்டங்கள் தீரும்.

இராமனின் 108 பெயர்கள்..!

ராம நவமி அன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள்:

 sri rama navami mantra in tamil

ராம மூல மந்திரம்:

ஓம் ஸ்ரீ ராமாய நமஹ

ராம தாரக மந்திரம்:

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா

ராம காயத்ரி மந்திரம்:

ஓம் தஸரதாய வித்மஹே
ஸீதாவல்லபாய தீமஹி
தந்நோ ராமஹ் ப்ரசோதயாத்

ராம தியான மந்திரம்:

ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்

லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

கோதண்ட ராம மந்திரம்:

ஸ்ரீ ராம ஜெய ராம கோதண்ட ராமா

முக்தி தரும் ராம மந்திரம்:

ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே

ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ

வெற்றி தரும் மந்திரம்:

ஓம் க்லீம் நமோ பகவதயே
ராமசந்திராய சகலஜன வஸ்யகராய ஸ்வாஹா

ராமருக்கு வெற்றியை தந்த மந்திரம்:

ஸ்ரீ ராம ஜெயம்

காந்திக்குப் பிடித்த மந்திரம்:

ரகுபதி ரகவ ராஜா ராம்!

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.
சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement