ராம நவமி ஸ்லோகம்
இந்து மதத்தில் ராம நவமி மிகவும் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று. ராமர் பிறந்த நாள் தான் ராம நவமியாக கொண்டாடப்படுகிறது. விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் தான் ராமர். விஷ்ணு பகவான் பூவுலகில் தர்மத்தை நிலைநாட்ட ராமர் அவதாரம் எடுத்ததாக கூறப்படுகிறது. ராம நவமியானது ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் அமாவாசை முடிந்து, வளர்பிறை நவமி திதி ஏப்ரல் 16 ஆம் தேதி மாலை 5. 46 மணிக்குத் தொடங்கி, நவமி திதி ஏப்ரல் 17-ம் தேதி வருகிறது. இந்த நாளில் கடவுளுக்கு விரதம் இருந்து வழிபடுவார்கள். இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுவதால் கேட்ட வரன் கிடைக்கும். அவரின் அருளானது முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த விரதம் மேற்கொள்ளும் போது அவருக்கு உரிய மந்திரங்கள், போற்றிகள் போன்றவற்றை கூறி வணங்குவார்கள். அதனால் தான் இந்த பதிவில் ராம நவமி ஸ்லோகம் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
Rama Navami Slogan in Tamil
ராமர் ராமர் ஜெய ராஜா ராமர்
ராமர் ராமர் ஜெய சீதா ராமர்
ராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்
ராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்
கொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்
துறு துறு சிறுவன் தசரத ராமர் க
ல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்
ஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்
இணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்
ராஜ குருவாம் பரத ராமர்
தந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்
அன்புள்ள கணவன் சீதா ராமர்
மூத்த மகனாம் சுமித்ர ராமர்
மன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்
மன்னித்தருளும் கைகேயே ராமர்
மகனே போன்றவர் ஜனக ராமர்
உற்ற தோழன் குகனின் ராமர்
உதவும் நண்பன் சுக்ரீவ ராமர்
ராம நவமி அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |