பிறந்த தேதி வைத்து ராசி நட்சத்திரம் கண்டுபிடிப்பது எப்படி?

Rasi Nakshatra Calculator in Tamil

ராசி நட்சத்திரம் கண்டறிவது எப்படி? | Rasi Nakshatra Calculator by Date of Birth

How to Find Rashi and Nakshatra by Date of Birth – பொதுவாக நமது பிறப்பு நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரம் என்று சொல்வார்கள். ஜோதிடத்தில் பொதுவாக 27 நட்சத்திரங்கள் இருக்கிறது. அந்த 27 நட்சத்திரமும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. நட்சத்திரம் எப்படி கணிக்கப்படுகிறது என்றால் ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கின்றதோ, அந்த நட்சத்திரமே அந்தக் குழந்தையின் பிறப்பு அல்லது ஜென்ம நட்சத்திரம் ஆகும். சிலர் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தை பிறக்கும் நட்சத்திரத்தை குறிச்சி வச்சிருக்க மறந்துடுவாங்க. அதுக்கு அப்பறம் அந்த குழந்தைக்கு என்ன ராசி? என்ன நட்சத்திரம்? என்பது தெரியாமலேயே போய்விடும். ஒருவருடைய பிறந்த தேதி வைத்து ராசி மற்றும் நட்சத்திரத்தை மிக எளிதாக கண்டுப்பிடிக்க முடியும். உங்களுடைய ராசி மற்றும் நட்சத்திரத்தை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள ராசி நட்சத்திரம் அட்டவணையில் உங்களுடைய பிறந்த தேதி மற்றும் பிறந்த நேரத்தை உள்ளிடுவதன் மூலம் உங்களுடைய ராசி மற்றும் நட்சத்திரத்தை எளிதாக தெரிந்து கொள்ளுங்கள்.

Nakshatra Finder Tamil by Date of Birth

பிறந்த தேதி, நேரம் தெரியாது, ஜாதகம் இல்லை என்றால் ஜாதக பலன்கள் எப்படி பார்ப்பது?

ராசி நட்சத்திரம் கண்டுபிடிக்க உதவும் அட்டவணை – Rasi Nakshatra Calculator in Tamil:

ஜாதகம்:

ராசி சக்கரத்தில் முற்றிலும் 12 ராசி கட்டங்கள், 9 கிரகங்கள், 12 வீடுகள் மற்றும் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ராசி சக்கரம் 12 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது, இது வீடுகள் என்று அழைக்கப்படுகிறது. மேற்கத்திய ஜோதிடத்தில், ராசி சக்கரம் வட்ட வடிவத்தில் உள்ளது, ஆனால் இந்து ஜோதிடத்தின் படி, அது சதுர வடிவத்தில் உள்ளது. ஒருவருடைய ராசியை வைத்து தான் அவர்களுடைய நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கும்.. சுப பலன்கள் அசுப பலன்கள் எப்படி இருக்கும் போன்றவை  கணிக்கப்படுகிறது. ஆகவே ஒருவருடைய ராசி நட்சத்திரம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

நட்சத்திர படி குழந்தை பெயர்கள் வைக்க வேண்டுமா..?

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்