திருமணத்தில் எந்த ராசிக்கு எது பொருத்தமான ராசி | Rasi Porutham For Marriage in Tamil

Rasi Porutham in Tamil

எந்த ராசிக்கு எது பொருந்தும் ராசி? Entha Rasiku Entha Rasi Porutham in Tamil

Rasi Porutham in Tamil: ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு ராசிக்காரர்கள் மிக பொருத்தமாக இருப்பார்கள். ஒவ்வொரு ராசிகளுமே பஞ்ச பூதங்களை கொண்டே செயல்படுகிறது. 12 ராசிக்காரர்களில் சில ராசிக்காரர்கள் சில ராசிக்காரர்களுடன் ஒத்துப்போவார்கள். சில ராசிகளுக்கு ஓத்தே போகாது. சிலருக்கு திருமணத்தில் சரியான ராசி பொருத்தம் பார்க்காமல் வாழ்க்கையில் எப்போதும் அவர்களுக்கு சண்டை சச்சரவுமாகவே இருக்கும். எனவே இரு தம்பதிகளும் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சிகரமாக இருக்க சரியான ராசி பொருத்தம் இருவருக்கும் பார்த்து திருமணம் செய்ய வேண்டும். அந்த வகையில் இந்த பதிவில் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசி பொருத்தமானது என்பதை விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

திருமணத்தில் இணைய கூடாத ராசிகள்..!

மேஷ ராசிக்கு பொருத்தமான ராசி:

 

மேஷ ராசிக்கு பொருத்தமான ராசி

மேஷ ராசிக்கு எந்த ராசி பொருந்தும்: மேஷ ராசிக்காரர்களுக்கு துலாம் ராசியினர் மிகவும் பொருத்தமான ஜோடி. துலாம் ராசிமட்டுமல்லாமல் மிதுனம், சிம்மம், தனுசு, விருச்சிகம், மகரம் போன்ற ராசிகளும் மேஷ ராசிக்காரர்களுக்கு பொருந்தக்கூடிய ராசிகள் தான்.

ரிஷப ராசிக்கு பொருத்தமான ராசி:

ரிஷப ராசிக்கு பொருத்தமான ராசி

 

12 ராசிகளில் 2- ம் இடத்தில் உள்ள ரிஷப ராசியினருக்கு விருச்சிகம், ரிஷபம் ராசியினர்கள் பொருத்தமானவர்கள். மேலும் கடகம், கன்னி, மீனம், மகரம் ராசிக்காரர்களும் பொருந்தக்கூடியவர்கள் தான்.

மிதுன ராசிக்கு பொருத்தமான ராசி:

மிதுன ராசிக்கு பொருத்தமான ராசி

மிதுன ராசிக்கு பொருத்தமான ராசி: மிதுன ராசிக்காரர்களுக்கு தனுசு ராசிக்காரர்கள் மிகவும் பொருத்தமானவர்கள். மேலும் துலாம், சிம்மம், மேஷம், மிதுனம் மற்றும் மகரம் ராசிக்காரர்களும் ஒத்துப்போக கூடியவர்கள். 

கடக ராசிக்கு பொருத்தமான ராசி:

கடக ராசிக்கு பொருத்தமான ராசி

கடக ராசிக்கு பொருத்தமானவர்கள் மகர ராசிக்காரர்கள். மேலும் கடக ராசிக்கு பொருந்தக்கூடியவர்கள் ரிஷபம், சிம்மம் மகரம் மற்றும் மீன ராசிகள் பொருத்தமான ராசியாகும்.

சிம்ம ராசிக்கு பொருத்தமான ராசி:

சிம்ம ராசிக்கு பொருத்தமான ராசிகும்ப ராசிக்காரர்கள் சிம்ம ராசிக்கு பொருத்தமான ஜோடியாகும். கும்பம் மட்டுமல்லாமல் விருச்சிகம், துலாம், மேஷம், தனுசு போன்ற ராசிகளும் ரொம்ப பொருத்தமானவையாகும்.

கன்னி ராசிக்கு பொருத்தமான ராசி எது:

கன்னி ராசிக்கு பொருத்தமான ராசி எது

கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் பொருத்தமான ராசி ஜோடி மீன ராசியாகும். மேலும் ரிஷபம், துலாம், கடகம், மகரம் போன்ற ராசிக்காரர்களும் கன்னி ராசிக்கு பொருத்தமானவர்கள்.

திருமண பொருத்தத்தில் ராசி பொருத்தம் பார்க்க வேண்டுமா?

துலாம் ராசிக்கு பொருத்தமான ராசி:

துலாம் ராசிக்கு பொருத்தமான ராசி

துலாம் ராசிக்கு மிகவும் பொருந்தக்கூடிய ராசி எதுவென்றால் மேஷம் ராசி. இதோடு கன்னி, சிம்மம், மகரம் மற்றும் தனுசு ராசிக்காரர்களும் துலாம் ராசிக்கு ஒப்பானவர்கள். 

விருச்சிக ராசிக்கு பொருத்தமான ராசி:

விருச்சிக ராசிக்கு பொருத்தமான ராசிவிருச்சிக ராசிக்கு பொருத்தமான ராசி: விருச்சிக ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசியினர் பொருந்தக்கூடியவர்கள். மேலும் சிம்மம், கன்னி, கடகம் மற்றும் மீனம் ராசிகளும் விருச்சிக ராசிக்கு ஒத்துப்போகும். 

தனுசு ராசிக்கு பொருத்தமான ராசி:

தனுசு ராசிக்கு பொருத்தமான ராசி

தனுசு ராசிக்கு பொருத்தமான ராசி: தனுசு ராசிக்கு ஏற்ற பொருத்தமான ராசி மிதுன ராசிக்காரர்கள். மேலும் சிம்மம் மேஷம் துலாம் மற்றும் கும்ப ராசிக்காரர்களும் தனுசு ராசிக்காரர்களுக்கு பொருத்தமான ராசிக்காரர்கள் தான்.

மகர ராசிக்கு பொருத்தமான ராசி:

மகர ராசிக்கு பொருத்தமான ராசி

கடக ராசிக்காரர்கள் மகர ராசிக்கு மிகவும் ஏற்றவர்கள். கடகம் ராசி மட்டுமல்லாமல் ரிஷபம், மீனம், விருச்சிகம் மற்றும் கன்னி ராசிக்காரர்களும் ஒத்துப்போக கூடியவர்கள்.

கும்ப ராசிக்கு எந்த ராசி பொருந்தும்:

கும்ப ராசிக்கு எந்த ராசி பொருந்தும்

கும்ப ராசிக்காரர்களுக்கு ஏற்றவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். மேலும் மிதுனம், துலாம், மேஷம், தனுசு மற்றும் கன்னி ராசிக்காரர்களும் கும்ப ராசிக்கு ஒத்துப்போகும். 

மீன ராசிக்கு பொருத்தமான ராசி:

மீன ராசிக்கு பொருத்தமான ராசி

கன்னி ராசிக்காரர்கள் மீன ராசிக்கு மிகவும் பொருத்தமான ராசிக்காரர்கள். மேலும் விருச்சிகம், கடகம், ரிஷபம், மகரம் மற்றும் துலாம் ராசிக்காரர்களும் மீனத்திற்கு பொருந்தக்கூடியவர்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்