திருமண பொருத்தத்தில் ராசி பொருத்தம் பார்க்க வேண்டுமா?

Rasi Porutham

திருமண ராசி பொருத்தம் பார்ப்பது எப்படி? Rasi Porutham..!

Rasi Porutham:- திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் இன்றியமையாத ஒரு நிகழ்வாகும். அத்தகைய திருமண பந்தத்தில் இணையும் கணவனும், மனைவியும் புரிந்து வாழவேண்டியது மிகவும் அவசியமாகும். அவ்வாறு புரிதல் இருந்தால் தான் அவர்கள் இருவரும் இணைந்து சிறப்பான வாழ்க்கையை வாழமுடியும். ராசி பொருத்தம் என்பது வம்ச விருத்திக்கு வழிவகை செய்யும் பொருத்தங்களில் ஒன்று.

இத்தைகைய பொருத்தம் இருந்தால் அவர்களது வாழ்வில் அனைத்து வளங்களும் கிடைக்கும். குறிப்பாக ஆண் வாரிசு பிறக்கும் என்று சில ஜோதிட சாஸ்திரங்களில் கூறப்படுகிறது. இந்த ராசிப் பொருத்தம் இருந்தால் வம்சம் தலைக்கும்.

கணவனுக்கு மனைவியும், மனைவி குடும்பத்தாரும், மனைவிக்கு கணவனும், கணவன் குடும்பத்தாரும் செய்யும் காரியங்கள் ராசியாக அமைய இந்த ராசிப் பொருத்தம் தேவை. இது சரியாக இல்லையென்றால் இருவரின் செயல்களும், எண்ணங்களும் வேறுபாடும். ஒவ்வொரு ராசிக்கும் பஞ்சபூத தத்துவங்கள், தன்மைகள் உண்டு, உதாரணமாக நீரும் நெருப்பும் சேராது, அது போல ஆண் மற்றும் பெண் இருவரின் தன்மைகள் ஒன்றாக இருக்க வேண்டும்.

அப்படி இருவரும் இணைந்து வாழ்வதற்கு வசிய பொருத்தம் ஒரு முக்கிய பொருத்தமாகும். பெண் ராசிக்கு ஆண் ராசி வசியமானால் அது உத்தமம் ஆகும். ஆனால் ஆண் ராசிக்கு பெண் ராசி வசியமானால் அது மத்திமம் ஆகும். அந்த வகையில் பெண் ராசிக்கு பொருந்தும் ஆண் ராசிகள் எது என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

திருமணத்தில் இணைய கூடாத ராசிகள்..!

திருமண ராசி பொருத்தம்

ராசி பொருத்தம் பார்ப்பது எப்படி?

பெண் ராசிக்கு ஏற்ற ஆண் ராசிகள் / Rasi Porutham..!
Noபெண் ராசி ஆண் ராசி
1மேஷம்சிம்மம், விருச்சிகம்
2ரிஷபம்கடகம், துலாம்
3மிதுனம்கன்னி
4கடகம்விருட்சிகம், தனுசு
5சிம்மம்மகரம்
6கன்னிரிஷபம், மீனம்
7துலாம்மகரம்
8விருச்சிகம்கடகம், கன்னி
9தனுசுமீனம்
10மகரம்கும்பம்
11கும்பம்மீனம்
12மீனம்மகரம்

 

மேல் கூறப்பட்டுள்ளது போல் கணவன் மனைவிக்கு இடையில் வசிய பொருத்தம் இருக்கிறது என்றால் அவர்கள் இருவரும் அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் பரிபூரண அன்போடும், அரவணைப்போடும் வாழ்வார்கள். இதற்கு உதவியாக இருப்பது ராசி பொருத்தமாகும். எனவே மேல் கொடுக்கப்பட்டுள்ள அட்டைவனையில் உள்ள பெண் ராசி, ஆண் ராசிக்கு வசிய பொருத்தம் உள்ளவை ஆகும். இது தவிர மற்ற ராசிகள் அனைத்தும் பொருந்தாது.

சரி நண்பர்களே ராசி பொருத்தம் பார்ப்பது எப்படி என்று தெரிந்து கொண்டீர்களா..? மேல் காட்டப்பட்டுள்ள அட்டைவனையை பார்த்தே மிக எளிதாக ராசிப் பொருத்தம் பார்த்துவிடலாம். இதற்காக இனி கவலை படவேண்டிய அவசியம் இருக்காது.

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நன்றி வணக்கம்..!

சரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி?

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்