Ratha Saptami 2025 Date and Time in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இந்த ஆண்டு ரத சப்தமி எப்போது வருகிறது.? என்பதை கொடுத்துள்ளோம். ரத சப்தமி பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிலை. ரத சப்தமி என்பது, இந்துக்களில் வழிபாட்டு நாட்களில் முக்கியமான ஒன்றாகும். தை மாதம் வரும் வளர்பிறை சப்தமி திதி தான் ரத சப்தமியாக கொண்டாடப்படுகிறது.
இந்நாள் சூரிய பகவானை வெளிப்படுவதற்கு உகந்த நாள் ஆகும். ரத சப்தமி அன்று சூரிய பகவானை வழிபட்டால் இந்த பிறவியில் மட்டுமில்ல ஏழு பிறவிகளிலும் செய்த பாவங்கள் நீங்கும். இந்தியாவில் உள்ள அனைத்து சூரிய கோவில்களிலும் ரத சப்தமி மிக விமர்சியாக கொண்டாடப்படுகிறது. இதனை சிறப்புமிக்க ரத சப்தமி நாள் எப்போது வருகிறது.? எந்த நேரத்தில் வழிபட வேண்டும்.? என்பதை அனைவரும் அறிந்துகொண்டு சூரிய பகவானை வழிபட்டு வாழ்வில் நற்பலன்களை பெறுவோம்.
ரத சப்தமி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்.!
ரத சப்தமி 2025 தேதி மற்றும் நேரம்:
சப்தமியின் மற்ற முக்கிய நேரங்கள்:
சூரிய உதயம் | பிப்ரவரி 04, 7:09 AM |
ஸ்னான் முஹூர்த்தம் | பிப்ரவரி 04, 05:33 AM முதல் 07:09 AM வரை |
அர்க்யதானின் சூரிய உதய நேரம் | பிப்ரவரி 04, 7:05 AM |
சப்தமி திதி நேரம் | பிப்ரவரி 04, 04:37 AM முதல் பிப்ரவரி 05, 02:31 AM வரை |
சூரிய அஸ்தமனம் | பிப்ரவரி 04, 6:12 PM |
ரத சப்தமி என்பது, தை அமாவாசைக்கு ஏழாவது நாள் வரும் சப்தமி திதி ஆகும். இது சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. சூரிய பகவான் தனது 7 குதிரைகள் பூட்டிய ரத்தத்தினை வடக்கு திசையை நோக்கி திருப்பும் பயணம் ஆகும்.
இது கோடைகாலத்தின் வருகையை குறிக்கிறது. தென்னிந்தியாவில் ஏற்படும் தட்ப வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தை குறிக்கிறது. விவசாயிகளின் அறுவடை பருவத்தின் தொடக்கத்தினை குறிக்கிறது.
இந்நாளில், காலையில் எழுந்து சூரிய பகவானை வழிபட வேண்டும். இந்நாளில், விரதம் இருந்து சூரிய பகவானை வழிபட்டு, தானம் செய்வதால், பாவங்கள் நீங்கி, நோய் நீங்கி நீண்ட ஆயுளும், செழிப்பும், நல்ல ஆரோக்கியமும் கிடைக்கும்.
ரத சப்தமி நாளில் காலையில் எழுந்து, வீட்டை சுத்தம் செய்து சூரிய உதயத்திற்கு பிறகு குளித்து சூரிய பாகனை வழிபாடு செய்து, வாசலில் சூரியன் நடுவில் இருப்பது போன்ற தேர்க்கோலம் போட வேண்டும்.
சூரியனை வணங்கி அவருக்கு தீபாராதனை காட்ட வேண்டும்.
திருமாலின் அம்சம் சூரிய பகவான் என்பதால், ரத சப்தமி திருப்பதியில் மிக விமர்சியாக கொண்டாடப்படும். திருப்பதியில் சூரிய பிரபை வாகனத்தில் எம்பெருமான் எழுந்தருளுவார்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |