ரத சப்தமி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்.!

Advertisement

ரத சப்தமி மந்திரம் | Ratha Saptami Mantra in Tamil

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ரத சப்தமி அன்று சொல்ல வேண்டிய மந்திரம் பற்றி கொடுத்துள்ளோம். தை மாதம் சூரியனை வழிபட உகந்த மாதம் ஆகும். அப்படி தை மாதத்தில் சூரியனை வழிபாடுதற்கு உரிய நாளாக ரத சப்தமி கருதப்படுகிறது. இதனை சூரியஜெயந்தி என்றும் அழைப்பார்கள். தை மாதத்தில் வரும் வளர்பிறை சப்தமி ரத சப்தமியாக கருதப்படுகிறது.

ரத சப்தமி என்பது, சூரியன் தனது தேரை தெற்கிலிருந்து வடக்கு திசையை நோக்கி திருப்பும் நாள் ஆகும். இந்நாளில், விரதம் இருந்து சூரியனை வழிபட்டால் இந்த பிறவியில் மட்டுமின்றி ஏழு பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். அனைத்து நன்மைகளும் வந்து சேரும். எனவே, அன்றைய தினம் அனைவரும் சூரிய பகவானை வழிபட்டு நன்மையை பெறுவோம். சூரிய பகவானை வழிபடும்போது, பின்வருமாறு மந்திரங்களை கூறி வழிபடுவது இன்னும் சிறப்பு சேர்க்கும்.

ரத சப்தமி அன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள்:

ரத சப்தமி மந்திரம்

“ஓம் நமோ ஆதித்யாய… ஆயுள், ஆரோக்கியம், புத்திர் பலம் தேஹிமே சதா!”

ரத சப்தமி அன்று வழிபடும்போது சூரியனை நோக்கி இந்த மந்திரந்தை சொல்லி வணங்க வேண்டும்.

ரத சப்தமி என்றால் என்ன.?

Ratha Saptami Snana Mantra in Tamil | Ratha Saptami Arghya Mantra in Tamil:

Ratha Saptami Snana Mantra in Tamil

ஸப்த ஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோகைக தீபிகே
ஸப்த ஜன்மார்ஜிதாம் பாபம் ஹரஸப்தமி ஸத்வரம்

யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் சோகம் ச மாகரி ஹந்து ஸப்தமீ

நெளமி ஸப்தமி தேவி த்வாம் ஸப்தலோகைக மாதரம்
ஸப்த அர்க பத்ர ஸ்நானேன மம பாபம்வ்யபோஹய

மடி வஸ்த்ரம் உடுத்தி நெற்றிக்கு இட்டுகொண்டு ஸங்கல்பம் செய்துகொண்டு ரத ஸப்தமி ஸ்நானாங்கம் அர்கிய ப்ரதானம் கரிஷ்யே என்று சொல்லி கீழ் கண்டமந்திரம் சொல்லி நீரால் ஸூர்யனுக்கு அர்கியம் விட வேண்டும்.

ஸப்த ஸப்தி ரதாரூட ஸப்த லோக ப்ரகாசக
திவாகர க்ருஹாணார்க்கியம் ஸப்தம்யாம் ஜ்யோஷிதாம் பதே

திவாகராய நம: இதமர்க்கியம் இதமர்க்கியம், இதமர்க்கியம்.

ரதசப்தமி அன்று காலையில் எழுந்து குளித்துவிட்டு, தலையில் ஏழு எருக்க இலைகள், பச்சரிசி, அருகம் புல், மஞ்சள் தூள் மற்றும் பசுஞ்சாணி வைத்துக்கொண்டு கிழக்கு நோக்கி இந்த மேலே சொல்லியுள்ள மந்திரத்தை கூறுங்கள். இவ்வாறு செய்தால் ஏழு பிறவிகளில் செய்த பாவம் நீங்கும்.

ரத சப்தமி நல்வாழ்த்துக்கள்.!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement