What is Ratha Saptami in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். ரத சப்தமி பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ரத சப்தமி என்பது, திருப்பதியில் பிரபலமாக கொண்டாடப்படும் விழா என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியும். ஆனால், ரத சப்தமி என்றால் என்ன.? இது எதற்காக கொண்டாடப்படுகிறது.? என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
ரத சப்தமி என்பது இந்துக்கள் பண்டிகைகளில் ஒன்றாகும். இருந்தாலும் பெரும்பாலானவர்கள் இதை கொண்டாடுவதில்லை. இதனை பற்றியும் யாரும் அறியவும் இல்லை. ரத சப்தமி நாளில் சூரிய பகவானை வழிப்படுவது வழக்கம். இது சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், இதுபோன்ற பல விவரங்களை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
Ratha Saptami Meaning in Tamil:

சூரிய கடவுள் உள்ள அனைத்து கோவில்களிலும் ரதசப்தமி மிக விமர்சியாக கொண்டாடப்படுகிறது. முக்கியமாக திருப்பதி திருமலையில் ரதசப்தமி அன்று ஒரு நாள் பிரம்மோற்சவம் நடைபெறும். இந்தியாவில் உள்ள அனைத்து சூரியக் கோவில்களிலும் ரதசப்தமி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது.
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இயங்குவதற்கு தேவையான ஆற்றலை வழங்கக்கூடியவர் சூரியபகவான். இந்நாளில் சூரிய உதயத்திற்கு பிறகு புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு வாய்ந்தது ஆகும். முடியாதவர்கள் வீட்டிலே குளித்து விட்டு சூரிய பகவானை வணங்கிவிட்டு வீட்டிலேயே வழிப்படலாம்.
தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் ஆரோக்கியம்மேம்பட்டு வர வேண்டியும், வீட்டில் உள்ள வறுமை ஒழிந்து, செல்வ வளம் பெருக வேண்டியும் ரதசப்தமி நாளில் சூரிய பகவானை வழிபட வேண்டும். இந்த வழிபாட்டினை அணைத்து வயதினமும் செய்யலாம்.
இந்த ஆண்டு 2025 ரதசப்தமி ஆனது, பிப்ரவரி 04 ஆம் தேதி (தை 22 ஆம் தேதி) செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. எனவே, அன்றைய தினம் சூரிய பகவானை வழிப்பட்டு எல்லா நன்மைகளும் பெறுவோம்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |










