Ratha Saptami Valipadu in Tamil | ரத சப்தமி வழிபாடு
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில்ரத சப்தமி அன்று எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதைகொடுத்துள்ளோம். ரத சப்தமி என்பது, சூரிய பகவானை வழிபடுவதற்கு உரிய நாள் ஆகும். ரதசப்தமி என்பது இந்து மதத்தவரால் தை அமாவாசை முடிந்து ஏழாவது நாள் கொண்டாடப்படும் விழா ஆகும். சூரிய தேவன் ஏழு குதிரைகள் பூட்டிய தனது ரதத்தை வடக்கு நோக்கி திருப்பி பயணிக்கும் திசை ஆகும்.
இந்த ஆண்டு ரத சப்தமி ஆனது, 2025 ரத சப்தமி ஆனது, பிப்ரவரி 04 ஆம் தேதி (தை 22 ஆம் தேதி) செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் சூரிய தேவனை வழிபட்டால் ஏராளமான நன்மைகளை பெறலாம். ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில் ரத சப்தமி அன்று சூரிய தேவையனை எப்படி வழிபட வேண்டும் என்பதை கொடுத்துள்ளோம். வழிபாட்டு முறைகளை முழுவதுமாக படித்து தெரிந்துகொண்டு சூரிய பகவானை வழிபாடு செய்து நன்மைகளை பெறுங்கள்.
ரத சப்தமி வழிபாடு செய்யும் முறை:

- ரத சப்தமி நாளில், அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து குளித்து விட்டு பூஜை செய்ய தயாராக வேண்டும்.
- ஆண்கள் 7 எருக்கை இலையின் மீது சிறிது எள், திருநீறு வைத்துக் கொண்டு நீராட வேண்டும். அதேபோல் பெண்கள் எருக்கை இலை, எள், மஞ்சள் வைத்து குளிக்க வேண்டும்.
- குறிப்பாக ஆற்றங்கரையில் நீராடி விட்டு சூரியனை வணங்கினால் இன்னும் சிறப்பு.
- இவ்வாறு செய்தால் நீத்தார் கடன் செய்த புண்ணியம் கிடைக்கும். குளித்த பின் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.
- பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். சூரியனை வணங்கிவிட்டு அவருக்கு தீபாராதனை காட்ட வேண்டும்.
- வீட்டின் வாசலில் அல்லது துளசி மாடம் எதிரே ரத சப்தமி கோலம் இட வேண்டும். அதாவது, சூரிய தேவன் தேரில் இருப்பது போல் கோலமிட வேண்டும்.
ரத சப்தமி அன்று போடவேண்டிய கோலங்கள்.!
- அடுத்து, அந்த இடத்தில் ஒரு மாவிளக்கு ஏற்றியும், பொங்கலிட்டும் வழிபடலாம். அந்நாளில் எள் உருண்டை செய்து தானம் செய்வது மிகவும் நல்லது.
- வழிபாட்டின் பொது ஆதித்ய ஹிருதயம், விஷ்ணு சஹஸ்ரநாமம், சூரிய சஹஸ்ரநாமம் பாராயணம், காயத்ரி மந்திரம் கூறி வழிப்படலாம்.
ரத சப்தமி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்.!
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |











