இரத்தம் கனவில் வந்தால் என்ன பலன்..! | Ratham Kanavu Palangal In Tamil..!

Advertisement

இரத்தம் கனவில் வந்தால் என்ன பலன்..! | Ratham Kanavu Palangal In Tamil..!

நாம் தூங்கும் போது நமக்கு பல்வேறு கனவுகள் வரும் பொதுவாக நாம் தூங்கி எழுந்திருக்கும் பொழுது நாம் கண்ட கனவு பெரிதாக ஞாபகம் இருக்காது. ஒரு சில நேரத்தில் நாம் கெட்ட கனவு கண்டால் நாம் அதை பத்தின சிந்தனையில் தான் நாள் முழுவதும் இருப்போம். நாம் கண்ட கனவிற்கான பலன்கள் என்ன என்று நாம் சிந்திக்க ஆரம்பித்துவிடுவோம். அதேபோல் நாம் ரத்தத்தை கனவில் கண்டால் என்ன பலன் என்பதை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.

நம் கனவில் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் கனவு கண்டால் நாம் தூக்கத்தில் சிரிப்போம். கெட்ட கனவு ஏதும் கண்டால் நாம் தூங்குவதில் இருந்து எழுத்துவிடுவோம். இரத்தம் பல்வேறு வழிகளில் கனவில் வரும் தரையில் இரத்தம் இருப்பது போல் மற்றும் துணியில் இரத்தம் இருப்பது போல் வெவ்வேறு வகையான இரத்தம் கனவில் வந்தால் என்ன பலன் மற்றும் ஏன் அப்டி கனவு வருகிறது என்று பார்க்கலாம் வாருங்கள்.

இரத்தம் என்பதை இப்படி கூட சொல்லலாமா..?

இரத்தம் கனவில் வந்தால் என்ன பலன்:

இரத்தத்தில் வாசகம்:

  • இரத்தத்தில் எதோ எழுதப்பட்ட வாசகம் உங்கள் கனவில் வந்தால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இனி மாற்றமுடியாத நிரந்தரமான ஒன்றை குறித்து நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.

இரத்தத்தில் கை:

  • இரத்தம் கை இருப்பதுபோல் கனவு கண்டால் அதிகமுயற்சி எடுத்து நீங்கள் தற்போது செய்துகொண்டிருக்கும் வேலையை விட விரும்பவில்லை என்று அர்த்தம்.

இரத்த கரை சுவர்:

  • இரத்த கரை சுவற்றில் இருப்பதுபோல் கனவு கண்டால் நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய எதோ ஒரு விஷயத்தை குறிக்கிறது. உதாரணத்திற்கு சமையல் அறையில் இரத்த கரை சுவற்றில் இருந்தால் நீங்கள் சாப்பிடும் பழக்கத்தில் எதோ ஒன்றை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பொருள். அதேபோல குளியல் அறை உங்கள் உடல் நலனையும் மற்றும் படுக்கை அறை உங்கள் உறவு நலனையும் குறிக்கும்.

வேறு யாரவது இரத்தம் வடித்தால்:

  • வேறு யாரவது இரத்தம் வடிப்பது போல கனவு கண்டால் நீங்கள் மன அளவில் மிகவும் நொந்து போய் இருப்பதாகவும் மேலும் உங்களுக்கு உதவி தேவைப்படுவதாகவும் பொருள் படும்.

இரத்த காயம்:

  • காயம் பட்டு இரத்தம் வருவது போல கனவு கண்டால் பிறரோடு நீங்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடப்போகிறீர்கள் என்று பொருள்.
  • விபத்து மற்றும் சண்டை ஆகியவற்றில் இரத்தம் வருவது போல கனவு கண்டால் அதற்கு முன் நீங்கள் செய்த விஷயத்தில் உங்களுக்கு குறைந்ததாக உணர்த்துகிறது.
  • உங்கள் உடலின் ஏதோ ஒரு பாகம் காயம் பட்டு இரத்தம் வருவது போல் கனவு கண்டால் குறிப்பிட்ட விஷயத்தில் உங்கள் ஆர்வம் அன்பு குறைந்துள்ளதாக பொருள் படும்.
  • உங்களுக்கு அறுவை சிகிச்சை நடந்து அதில் இரத்தம் வருவது போல கனவு கண்டால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எதோ ஒரு மாற்றத்தை குறித்து நீங்கள் பயப்படுகிறீர்கள் என்று பொருள் படும்.
  • உங்கள் மூக்கில் இருந்து இரத்தம் வடிவதாக கனவு கண்டால் ஏதோ ஒரு சிறிய சிக்கல் வரப்போவதாக அர்த்தம்.
  • உங்கள் விரலில் இருந்து இரத்தம் வருவது போல கனவு கண்டால் பொருளாதார சிக்கல் அல்லது நீங்கள் ஏமாற்றப்படலாம்.
  • உங்கள் கையில் இருந்து இரத்தம் வருவதாக கனவு கண்டால் நீங்கள் செய்த தவறினால் உங்களுக்கு பண கஷ்டம் வருவதை குறிக்கும்.
  • உங்கள் காலில் இருந்து இரத்தம் வருவதாக கனவு கண்டால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட போவதை குறிக்கும் மற்றும் திடீர் பண வரவு இருக்கும்.
  • உங்கள் பாதத்தில் இருந்து இரத்தம் வருவது போல கனவு கண்டால் உங்கள் கீழ் பணியாற்றும் நபர் உங்களை ஏமாற்றலாம் அல்லது உங்களை காட்டி கொடுக்கலாம்.
  • உங்கள் வயிறு முழுவதும் இரத்தமாக கனவு கண்டால் உங்களுக்கு அதிக பணம் கிடைக்கும் என்று பொருள்.

தரையில் இரத்தம்:

  • தரையில் இரத்தம் இருப்பது போல கனவு கண்டால் நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று உணர்த்துவதாக பொருள்.

துணியில் இரத்தம்:

  • உங்கள் படுக்கையிலோ அல்லது உங்கள் துணிகளிலோ இரத்தம் இருப்பதாக கனவு கண்டால் எதோ ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ள போகிறீர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பொருள்.
  • வேறு யாராவது உடையில் இரத்தம் இருப்பதாக கனவு கண்டால் உங்கள் எதிரியை வெற்றி கொள்வீர்கள் என்று பொருள்.
  • பூக்களில் இருந்து இரத்தம் கொட்டுவதாக கனவு கண்டால் உங்கள் முயற்சிக்காக பாராட்டு கிடைக்கும் என்று பொருள்.

விலங்கின் இரத்தம்:

  • வெட்டப்பட்ட விலங்கில் இருந்து இரத்தம் வருவதாக கனவு கண்டால் பொருள் வரவு அதிகரிக்கும் என்று பொருள்.

இரத்தம் அதிகரிக்க | Blood Increase Foods Tamil.!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement