சனியால் வாழ்க்கை மோசமாகும் ராசிகள் | சனிப் பெயர்ச்சியின் பலன்கள் கிடைக்க பரிகாரம்
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 29.03.2025 அன்று சனி பெயர்ச்சி நடக்க இருக்கிறது, அதேசமயம் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 06.03.2025 அன்று சனி பெயர்ச்சி நடக்கவிருக்கிறது. இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரம் 3-ம் பாதம், கும்ப ராசியிலிருந்து பூரட்டாதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த ராசியிலே சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு இருக்க போகிறார். இந்த பெயர்ச்சியினால் எல்லா ராசிகளுக்கும் பலன்களை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்க போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
கன்னி:

சனி பகவான் கன்னி ராசியில் 7-ம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சியின் மூலம் அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு அங்கே இருந்த பிரச்சனைகள் நீங்க தொடங்கும். மீ ; உம பணியில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். உங்களின் செயல்களால் உயர் அதிகாரிகள் உங்களை பாராட்ட நேரிடும். இருந்தாலும் பணியில் உங்களுக்கு தெரியாமல் இருந்த எதிரிகள் உங்களுக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
நீங்கள் வீடோ அல்லது இடமோ எதை வாங்க நினைத்தாலும் அதனை ஒரு முறைக்கு பல முறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. அதே போல ஏதேனும் கையெழுத்து இடுவது போல இருந்தாலும், அதனை கவனமாக செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மகிழ்ச்சியாக பேசுங்கள், அப்போது தான் குடும்பத்தில் உள்ளவர்களுடன் நல்லுறவை பராமரிக்க முடியும். உங்களின் துணையிடம் வெளிப்படையாக பேசுங்கள், அப்போது தான் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிக்க முடியும். உங்களின் ஆரோக்கியத்தில் சுளுக்கு, பல் பிரச்சனை, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் சந்திக்க வேண்டியிருக்கும்.
பரிகாரம்: அனுமனை வழங்குவதன் மூலம் உங்களுக்கு நன்மை நடக்க நேரிடும், ஒரு முறை திருநாகேஸ்வரம் சென்று வணங்கி விட்டு வருவது உங்களுக்கு நன்மையை தரும்.
மீன ராசியில் சனி பகவான் பெயர்ச்சி அதிர்ஷ்டமா! கஷ்டமா!
சிம்மம்:

சனி பகவான் உங்க ராசிக்கு 8-ம் இடத்தில் பெயர்ச்சி அடைக்கிறார். இந்த காலகட்டமானது உங்களுக்கு அஷ்டம சனியின் காலமாக இருக்கிறது. அதனால் நீங்கள் இந்த நேரத்தில் பேசும் வார்த்தைகளை கவனமாக பேசினாலே மட்டுமே நல்லது நடக்கும். பணியை பொறுத்தவரை உங்களின் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். உங்களின் பணிகளில் வேலைபார்க்கும் சக பணியாளர்களிடம் சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. அதே போல யாரிடமும் நெருங்கி பழக வேண்டாம்.
சில நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும், இதில் நிதானமாக இருப்பது அவசியம். இரவு நேரத்தில் தனிமையில் செல்வதை தவிர்க்க வேண்டும். இதனால் ஆபத்துகள் ஏற்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை தூக்கமின்மை, மன அழுத்தம், தலைவலி போன்ற பிரச்சனை ஏற்படும்.
பரிகாரம்: இந்தக் காலகட்டத்தில் ஒருதடவை பொங்கு சனிபகவான் அருளும் திருக்கொள்ளிக்காடு தலத்துக்குச் சென்று வணங்கி வாருங்கள்,உங்களின் வாழ்க்கையில் நன்மைகள் பெருகும்.
மேஷம்:

மேஷ ராசியில் சனி பகவான் 12-ம் இடத்திற்கு வருகிறார். இந்த காலமானது உங்களுக்கு ஏழரை சனியின் ஆரம்பமாக இருக்கிறார். இந்த காலகட்டம் ஆனது உங்களுக்கு பல வகைகளில் இருந்த தீமைகள் நீங்கி நன்மைகள் தொடங்கயிருக்கிறது. இருந்தாலும் நீங்கள் எந்த செயல் செய்தாலும் அதனை திட்டமிட்டு செய்வது நல்லது. பணியில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். இதனால் உங்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும்.
உங்களின் உறவினர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் எப்போதும் கெடுக்கலாம் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் சற்று விலகியே இருங்கள். அது போல பணியில் சக பணியாளர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் வேண்டும். ஆரோக்கியத்தில் கழுத்து, தலை அல்லது முகத்தில் ஏதேனும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது நல்லது.
பரிகாரம்: இந்த நேரத்தில் நீங்கள் முருகனை வணங்குவது நல்லது. அதுமட்டுமில்லாமல் திருவெண்காடு புதன் தளத்திற்கு சென்று ஒரு முறை வழிபடுவது உங்களின் வாழ்க்கையில் நன்மைகள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும்.
சனி பகவானால் சில ராசிக்காரர்களுக்கு 2025 படாத பாடா இருக்க போகுது
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |












