ரிஷபம் பிறப்பு முதல் இறப்பு வரை இப்படித்தான் இருக்கும்..! Rishaba Rasi 2023 in Tamil
Rishaba Rasi Characteristics in Tamil:- வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம் பதிவில் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு குணம், பொருளாதாரம், அதிர்ஷ்டம், வேலைவாய்ப்பு, திருமணம் போன்றவை அவர்களுடைய வாழ்க்கையில் எப்படி இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.
![]() |
ரிஷப ராசி குணங்கள் / Rishaba Rasi Characteristics in Tamil..!
rishaba rasi characteristics: ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவர். ரிஷப ராசியில் கிருத்திகை முதல் பாகம், ரோகிணி, மிருக சீரிஷம் 1, 2-ம் பாகங்கள் ஆகியவை அடங்கும்.
ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களை கவரும் வண்ணத்தில் அழகான தோற்றத்தில் காணப்படுவார்கள்.
இவர்கள் கம்பீரமான தோற்றத்தையும், நடுத்தரமான உயரத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் இயற்கையாகவே மிகவும் சாதுவாகவும், மிகவும் அமைதியான குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.
அதேபோல் சண்டை என்று ஒன்று வந்துவிட்டால் இவர்களை வீழ்த்துவது சற்று கடினம். இவர்களை நம்பி எந்த விஷயத்தை ஒப்படைத்தாலும் அதில் தனி அக்கறை செலுத்தி பொறுப்பாக இருந்து முடிப்பார்கள். ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சுயநலமாக இருப்பது பிடிக்காது.
ரிஷப ராசிக்காரர்கள் பழகுவதில் இனிமையான குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அடிக்கடி மாறாமல் ஒரே நிலையாக இருக்கவே அதிகம் விரும்புவார்கள். இவர்கள் கற்பனை கோட்டை கட்டி அதில் வாழ்ந்து மகிழ மாட்டார்கள்.
மேலும் இவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதனை கண்டு தயங்காமல் அதனை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவர்கள்.
இவர்களுடைய முகத்தில் சிக்கனமும், கண்களில் அன்பும் உடையவர்களாகவும், அழகாக சிரிப்பவர்களாக திகழ்வார்கள்.
நண்பர்களுடன் நெருங்கி பேசினாலும் ஓரளவு ரகசியத்தை மனதிலேயே வைத்து கொள்வார்கள்.
மிதுன ராசி பொதுவான குணங்கள் 2023 |
Rishaba Rasi Characteristics in Tamil – காதல்:-
இந்த ரிஷப ராசியினர் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் இருக்கும்.
ரிஷப ராசியின் திருமண வாழ்க்கை:-
ரிஷப ராசி திருமண வாழ்க்கை: ரிஷப ராசி அன்பர்கள் திருமண வாழ்க்கையில் மிகவும் அக்கறையாக இருப்பார்கள். இவர்களுக்கு திருமணம் ஆனதும் திருமண வாழ்க்கையை தம்பதியினர் ஒற்றுமையுடனும், அன்புடனும் பழகி மணவாழ்க்கையை அனுபவிப்பார்கள்.
இந்த ராசிக்காரர்களுக்கு கன்னியா ராசியிலோ, மகர ராசியிலோ பிறந்தவர்கள் ஜோடி சேர்ந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும். சிம்மம், கும்பம் ராசிகளில் பிறந்தவர்களைச் சேராமல் இருப்பது நல்லது.
ரிஷப ராசி குணங்கள் – குடும்பம்:-
ரிஷப ராசி குணங்கள்: ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல தாய் தந்தை இருப்பார்கள். குழந்தைகளின் மனதில் நிறைந்த அன்பும் தைரியமும் நிறைந்திருக்கும். ரிஷப ராசி கன்னி பெண்களுக்கு சுகம் நிறைந்திருக்கும். ரிஷப ராசிக்காரர்கள் மற்றவர்களின் பேச்சில் மயங்காதவர்கள். அவரின் சந்தோஷத்தில் மற்றவரையும் சந்தோஷமாக வைப்பவர்.
இந்த ராசிக்காரர்களின் உயர்வுக்கு குடும்பம் மற்றும் நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். குடும்பத்தைப் பற்றி யோசனை செய்து அதற்கான தீர்வு எடுப்பர்.
Rishaba Rasi 2021 in Tamil – அதிர்ஷ்ட நாள்:-
ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட நாள் சனி மற்றும் புதன் கிழமை உன்னதமான நாள். இவர்கள் இந்த நாட்களில் எந்த காரியத்தை செய்தாலும் வெற்றி உண்டாகும்.
Rishabam Characteristics in Tamil – தொழில்:
பொதுவாக ரிஷப ராசிக்காரர் சிறு வயதிலேயே குடும்பப் பொறுப்பை சுமக்க ஆரம்பித்து விடுவார். அதனால் அவரது குடும்பத்தினர் அவரை மிகவும் மரியாதையாக நடத்துவார்கள். சிறு அளவில் தொழில் ஆரம்பித்தாலும் நேர்மையாகத் தொழில் செய்வார். பணத்துக்காக தரம் குறைந்த பொருட்களை விற்க மாட்டார். பெரும்பாலும் கமிஷன் ஏஜென்ட், ரியல் எஸ்டேட் [மண் ராசி], நகைக் கடை, அடகுக் கடை, ஜவுளிக் கடை, ஷேர் புரோக்கர், ஃபைனான்ஸ் போன்ற தொழில்களே இவருக்கு அமையும். சுக்கிரன் நவரத்தினம் மற்றும் ஜவுளிகளுக்கு அதிபதி. மார்க்கெட்டிங், சேல்ஸ் ரெப் போன்ற அலைச்சலும் வள வளவென்று பேசும் வேலைக்கும் இவர் செல்ல மாட்டார்.
எப்போதும் இவரிடம் யாருடைய பணமாவது இருந்துகொண்டே இருக்கும். பணத்தை எண்ணிக்கொண்டிருக்கும் வேலையே இவருக்கு பெரும்பாலும் அமையும். உட்கார்ந்த இடத்தில் இருந்தே இவர் நல்ல லாபம் சம்பாதிப்பார். தான் உட்காரும் அளவுக்கு ஒரு பெரிய வசதியான இருக்கை – சோஃபா செய்து போட்டு அதில் சொகுசாக உட்கார்ந்துகொள்வார். அங்கிருந்தபடியே வேலை செய்து பணம் பார்ப்பார். மெல்ல மெல்லத் தொழிலில் முன்னேறி வருவார். ஆனால் இவர் வளர்ச்சி ‘ஸ்டெடியாக’ இருக்கும். பெரும்பாலும் ரிஷப ராசியினர் வாழ்வில் அதிக மேடு பள்ளங்கள் இருப்பதில்லை. எதற்கும் பதட்டப்பட மட்டார். நிதானமாக யோசித்து செயல்பட்டு வெற்றி காண்பார்.
இது போன்ற ஆன்மீக தகவலை தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். | ஆன்மீக தகவல்கள் |