ரிஷப ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோவில்

Advertisement

Rishaba Rasi Kadavul

கஷ்டம் என்று வரும் போது கோவிலுக்கு செல்வதும் கடவுளை வணங்குவதும் இயல்பான ஒன்று தான். சில பேர் எப்போதுமே கடவுளை வணங்குவார்கள். அப்படி நீங்கள் வணங்கும் போது அர்ச்சனை செய்வார்கள், அர்ச்சனை செய்யும் போது ராசி, நட்சத்திரம் படி கூறி வைப்பார்கள். இப்படி செய்வதால் கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

அது போல குழந்தை பிறந்ததும் நம் முன்னோர்கள் ஜாதகம் பார்த்து விட்டு வந்து கூறுவார்கள். இந்த குழந்தை முருகனுடைய குழந்தை என்று கூறுவார்கள். முருகனுக்கு தான் தத்து கொடுக்க வேண்டும் என்று கூறுவார்கள். இதை எதை வைத்து கூறுகிறார்கள் என்றால் அவரின் ராசி மற்றும் நட்சத்திரத்தை வைத்து தான் கூறுகிறார்கள். அந்த வகையில் நீங்க ரிஷப ராசியாக இருந்தால் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

ரிஷப ராசிக்காரர்கள்:

ரிஷப ராசிக்கு அதிபதியாக இருப்பது சுக்கிரன் தான். இந்த ராசிக்காரர்களுக்கு நந்தி பகவானை குறிக்கும். அதனால் ரிஷப ராசிக்காரர்கள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசநல்லூரில் அருள்புரியும் யோகநந்தீஸ்வரர் கோவிலில் சென்று வழிபடுவது சிறந்ததாக இருக்கும்.

இந்த கோவிலானது திருஞான சம்மந்தரால் கட்டப்பட்டது. இந்த கோவிலில் சித்திரை மாதத்தில் முதல் மூன்று நாட்கள் சூரிய ஒளி பூஜை நடைபெறும். பிரதோஷம், சிவராத்திரி, சோமவார நாட்களில் இந்த தளத்திற்கு சென்று வழிபட்டால் உங்களின் வாழ்க்கையில் எல்லா வளமும் கிடைக்கும்.

இந்த கோவிலில் இருக்கும் கிணற்றில் அமாவாசை தினம் அன்று கங்கை பொங்கி வரும் என நம்பப்படுகிறது. இந்த தினத்தில் ரிஷப ராசிக்காரர்கள் கலந்து கொண்டு நீராடினால் குடும்பத்தில் எல்லா செல்வமும் கிடைக்கும்.

திருவிசநல்லூர் சென்று அங்குள்ள யோகநந்தீஸ்வரரைத் தரிசித்துவிட்டு அருகில் இருக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியையும் மறக்காமல் தரிசனம் செய்து வாருங்கள். அதற்காக இந்த கோவிலுக்கு மட்டும் தான் செல்ல வேண்டும் என்று அவசியமில்லை, மற்ற கோவிலுக்கு சென்று வழிபடலாம். இந்த தளத்திற்கு சென்று வழிபடுவதால் கூடுதல் பலன்களை பெற முடியும்.

எப்படி கோவிலுக்கு செல்ல வேண்டும்:

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 8 கிலோ மீட்டர் தூரத்தில் திருவிடைமருதூர் சென்று அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தூரம் சென்றால் திருவிசநல்லூரை என்ற ஊரை அடையாலாம். இந்த ஊரை பண்டாரவாடை திருவிசநல்லூர்,, திருவியலூர், திருவிசலூர் என்ற பல பெயர்கள் இருக்கிறது.

மேஷ ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோவில்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement