ரோக நிவாரண அஷ்டகம் பாடல் வரிகள்..!

Advertisement

Roga Nivarana Ashtakam Lyrics in Tamil

இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே ஏதாவது ஒரு உடல்நல குறைபாடு ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும். அதனை ஒரு சிலர் மிகவும் எளிமையான முயற்சி செய்து நீக்கிவிடுவோம். ஆனால் ஒரு சிலருக்கு உள்ள உடல்நல பிரச்சனை அவ்வளவு விரைவில் நீங்காது. அதனை சரி செய்வதற்கு நாமும் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டிருப்போம் அவையாவும் அவ்வளவு நல்ல பலனை அளித்திருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் ரோக நிவாரண அஷ்டகம் பாடல் வரிககளை பதிவிட்டுள்ளோம்.

ராகுகால துர்க்கை அம்மனின் அஷ்டகம் வரிகள்

Roga Nivarana Ashtakam in Tamil

Roga Nivarana Ashtakam in Tamil

பகவதி தேவி பர்வத தேவி
பலமிகு துர்க்கையளே
ஜெகமது யாவும் ஜெய ஜெய வெனவே சங்கரி யுன்னைப்
பாடி டுமே
ஹந ஹந தகதக பசபச வெனவே தளிர்த்திடு ஜோதி யானவளே ரோகதி வாரணி சோக நிவாரணி தாபதி வாரணி ஜெய துர்க்கா
தண்டினி தேவி தக்ஷிணி தேவி கட்கினி தேவி துர்க்கையளே தந்தன தான தனதன தான தாண்டவ நடன ஈச்வரியே முண்டினி தேவி முனையொளி சூலி முனிவர்கள் தேவி மணித் தீலி
ரோகநி வாரணி சோக நிவாரணி தாபநி வாரணி ஜெய துர்க்கா
காளினி நீயே காமினி நீயே கார்த்திகை நீயே துர்க்கையளே நீலினி நீயே நீதினி நீயே நீர்நிதி நீயே நீர் ஒளியே
மாலினி நீயே மாதினி நீயே
மாதவி நீயே மான் விழியே ரோகநி வாரணி சோக நிவாரணி தாபநி வாரணி ஜெய துர்க்கா
நாரணி மாயே நான்முகன் தாயே நாகினியாயே துர்க்கையளே ஊரணி மாயே ஊற்றுத் தாயே
ஊர்த்துவ யாயே ஊர் ஒளியே காரணி மாயே காருணி தாயே கானக யாயே காசி னியே ரோகநி வாரணி சோக நிவாரணி தாபநி வாரணி ஜெய துர்க்கா
திருமகளானாய் கலைமகளானாய்
மலைமகளானாய் துர்க்கையளே பெருநிதி யானாய் பேரறிவானாய்
பெருவலி வானாய் பெண் மையளே
நறுமல ரானாய் நல்லவ ளானாய் நந்தினி யானாய் நங்கையளே ரோகநி வாரணி சோக நிவாரணி தாபநி வாரணி ஜெய துர்க்கா
வேதமும் நீயே வேதியள் நீயே வேகமும் நீயே துர்க்கையளே நாதமும் நீயே நாற்றிசை நீயே நாணமும் நீயே நாயகியே
மாதமும் நீயே மாதவம் நீயே மானமும் நீயே மாயவளே ரோகநி வாரணி சோக நிவாரணி தாபநி வாரணி ஜெய துர்க்கா
கோவுரை ஜோதி கோமள ஜோதி கோமதி ஜோதி துர்க்கையளே நாவுறை ஜோதி நாற்றிசை ஜோதி நாட்டிய ஜோதி நாச்சியளே
பூவுறை ஜோதி பூரண ஜோதி பூதநற் ஜோதி பூர ணையே ரோகநி வாரணி சோக நிவாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா
ஜெய ஜெய சைல புத்திரி ப்ரஹ்ம சாரணி சந்த்ர கண்டி னியே ஜெய ஜெய சூஷ் மாண்டினி ஸ்கந்த மாதினி காத்யா யன்யயளே ஜெய ஜெய கால ராத்திரி கௌரி ஸித்திதா ஸ்ரீ நவ துர்க்கையளே ரோகநி வாரணி சோக நிவாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா
ரோக நிவாரண அஷ்டகம் பாடல் வரிகள் Pdf 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement